தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் கொள்ளை
புதுடில்லி:டில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில், தொழிலதிபர் வீட்டில் புகுந்த கும்பல், ஆயுதங்களை காட்டி மிரட்டி, 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றது.கரண் சோப்ரா என்ற அந்த தொழிலதிபர், டில்லியின் தென் மேற்கு பகுதியில் காஸ் வினியோகம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் அவர் வீட்டில் இருந்த போது, நான்கைந்து பேர் திடீரென அவர் வீட்டில் புகுந்தனர்.ஆயுதங்களை காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த, 30 லட்சம் ரூபாயை அந்த கும்பல் கொள்ளையடித்தது.வசந்த்குஞ்ச் போலீசுக்கு கரண் சோப்ரா புகார் அளித்தார். போலீசார் வந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.