பணத்தை வாங்குங்கள்!
டில்லி குடிசைப்பகுதிகளுக்கு, பா.ஜ.,வினர் வீடு வீடாக சென்று 3,000 ரூபாய் தந்து ஓட்டு கேட்கின்றனர். அவர்களில் பலருக்கு வீட்டிலேயே ஓட்டளிப்பதற்கு தேர்தல் கமிஷன் வசதி செய்து தர உள்ளது. பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்; ஆனால் பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போடாதீர்கள். - அரவிந்த் கெஜ்ரிவால்ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி அரசின் அலட்சியம்!
கிராமப்புற மக்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். ஆனால் மத்திய பட்ஜெட்டில், 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி அளவே இந்தாண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை புறக்கணித்துஇருப்பது அரசின் அலட்சியத்தை காட்டுகிறது.- ஜெய்ராம் ரமேஷ்பொதுச் செயலர், காங்கிரஸ்ஊழல் கூட்டாளிகள்!
டில்லி தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றி உறுதியாகியுள்ளது. ஆம் ஆத்மியின் உண்மையான முகத்தை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஊழல், தாஜா செய்யும் அரசியல் மற்றும் சனாதனத்தை எதிர்ப்பதில் கூட்டாளிகள். இவர்களுக்கு இந்த தேர்தலில் டிபாசிட் கூட கிடைக்கக் கூடாது. - புஷ்கர் சிங் தாமிஉத்தரகண்ட் முதல்வர், பா.ஜ.,