உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் மேம்பாட்டு நிதி அமைச்சரவை ஒப்புதல்

முதல்வர் மேம்பாட்டு நிதி அமைச்சரவை ஒப்புதல்

விக்ரம்நகர்:பொது வசதிகளை மேம்படுத்த 1,400 கோடி ரூபாய் நிதியுடன் முதல்வர் மேம்பாட்டு நிதியை ஏற்படுத்த முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அதிகபட்ச செலவு 10 கோடி ரூபாயாக இருக்கும். இருப்பினும், விதிவிலக்கான சூழ்நிலையை கருத்தில் கொண்டு உச்சவரம்பை முதல்வர் உயர்த்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.டெல்லியின் உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உள்ளூர் அளவிலான மேம்பாட்டிற்கான எளிய வழிமுறையை புகுத்துவதன் மூலம் தற்போதுள்ள மேம்பாட்டு கட்டமைப்புகளில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிரப்புவதற்கும் இந்த முயற்சி ஒரு வழியை உருவாக்கும் என, ஒரு மூத்த அரசு அதிகாரி வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை