உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுசு கண்ணா புதுசு! வருகிறது பான் 2.0 அட்டை! இதுதான் ஸ்பெஷல்

புதுசு கண்ணா புதுசு! வருகிறது பான் 2.0 அட்டை! இதுதான் ஸ்பெஷல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; க்யூஆர் கோடுடன் கூடிய புதிய பான் அட்டை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.வருமானவரித்துறையால் வழங்கப்படும் முக்கிய அடையாளமான பான் அட்டையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். நிதி பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகளுக்கு இந்த அட்டை முக்கியமான ஒன்றாகும். ஒருவர் ஒரேயொரு பான் அட்டை தான் வைத்திருக்க முடியும்.இப்படி அதி முக்கியத்துவம் வாய்ந்த பான் அட்டையில் பல்வேறு நவீன அம்சங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. பான் அட்டை 2.0 என்ற அடையாளத்துடன் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த அட்டையில் க்யூ ஆர் கோடு இடம்பெற்றிருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் பான் அட்டையில் எண், எழுத்து இரண்டும் கலந்து 10 இலக்க அடையாளம் குறியீடாக இருக்கும். இதுவே பான் அட்டை 2ல் க்யூஆர் கோடாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு டிஜிட்டல் சேவை மேம்படுவதோடு, வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறைக்காக ரூ.1,435 கோடி செலவிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

R S BALA
நவ 26, 2024 19:56

பழைய அட்டையினை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீங்கள் வைத்து கொள்ளலாம் செல்லாது என்று ஒரு போதும் சொல்லமாட்டார்கள் இன்னும் பலர் கருப்பு வெள்ளை பான் அட்டை வைத்துள்ளார்கள் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் உங்கள் பான் எண் தெரிந்திருந்தால் போதுமானது பல இடங்களில் பயன்படுத்தும் நிலையுள்ளது அதுவும் ஆதாருடன் இணைத்த பின்பு இன்னும் சுலபமாகிவிட்டது, பல இடங்களில் ஆவண சான்று proof of documents சரிபார்ப்பிற்கு இது போன்ற பான் 2.0 உதவும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 26, 2024 15:53

இதைப்பற்றி சில ஆங்கில நாளேடுகளிலும் படித்தேன் ..... நவீன மயமாக்குவது தவறில்லை ...... பான் அட்டை வைத்திருப்பவர்களுக்கும், அரசுக்கும் பல நன்மைகள் ..... துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் தவிர்க்கப்படும் ..... திராவிடியாள் மாடல் தற்குறி ஸ் க்கு இதைப்பற்றிய புரிதல் இல்லாமல் உளறுகிறார்கள் .....


GMM
நவ 26, 2024 13:14

ஒருவருக்கு ஒரு வங்கி கணக்கு அடையாள எண். அந்த எண் அடிப்படையில் சில வங்கி கணக்கு தொடங்க அனுமதிக்கலாம். மார்ச் /ஏப்ரல் பராமரிப்பில் கணக்கு இருக்க வேண்டும். இல்லாத கணக்கை மே மாதம் நீக்கிவிட வேண்டும். அனைத்து வங்கி கணகிற்கும் பான் கார்டு கட்டாயம். 10000 மேல் 2 லட்சம் உள் உள்ள பரிவர்தனைக்கு 0.01 சதவீதம் வருமான வரி. 1,10,100 லட்ச பரிவர்த்தனை டிஜிட்டல் கரன்சியில் மட்டும். கல்வி, மருத்துவம்... போன்ற சேவைக்கு வருமான வரி விலக்கை முற்றிலும் நீக்க வேண்டும்.


Ramesh Sargam
நவ 26, 2024 13:01

ஒரு சிலருக்கு நிரந்தர வருமானமே இல்லை. அவர்களும் இந்த பாண் அட்டையை வைத்திருக்கவேண்டுமா?


Anantharaman Srinivasan
நவ 26, 2024 11:00

பழைய பான் அட்டை யை எல்லோரும் மாற்ற வேண்டுமா.. அல்லது அதையே வைத்துக்கொள்ளலாமா..?


Pats, Kongunadu, Bharat, Hindustan
நவ 26, 2024 10:59

ஒருவரின் ஆதார் நம்பரே பண பரிவர்த்தனை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் உரிமம், அடையாள அட்டை, தொலைபேசி எண், வங்கி கணக்கு எண் போன்ற அனைத்திற்கும் போதுமானது. ஒரே நாடு, ஒரே கார்டு திட்டம் வந்தால் நலம்.


Suresh
நவ 26, 2024 17:52

Yes its true, but SC not accepting this tem. SC wants separate PAN, Voter ID, Ration card etc...


Ganapathy
நவ 26, 2024 10:32

பான் கார்டை ஆறு அறிவுள்ள யாரும் அடையாளட்டையாக பயன்படுத்துவதில்லை. அதன் உபயோகமே அடையாளட்டையாக பயன்படுத்த அல்ல. உனது ஓட்டுனர் உரிமம். கடவுச்சீட்டு வாக்காளர் அடையாளட்டை என பல இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஆதார் அடையாளட்டை இருக்கும்போது நீ பான் அடையாளட்டையை எடுத்து நீட்டினாய்?


தமிழன்
நவ 26, 2024 10:15

மொத்தத்தில் எல்லாமே தேவையில்லாத ஆணிகளை புடுங்கு போறானுகள் மக்கள் வரி பணம் எப்படியெல்லாம் வீணாக போக வேண்டுமோ எப்படியெல்லாம் போகுது பண மதிப்பிழப்பு, தேர்தல் பத்திரம் நிதி நன்கொடை இதற்கெல்லாம் எவன் அப்பன் வீட்டு காசை செலவு செஞ்சானுகள்??


Ganapathy
நவ 26, 2024 10:35

நீ வரிகட்டாம இருக்க என்னென்னசெய்வியோ அதேமாதிரி உன்னைய வரிகட்டவைக்க என்னென்னசெய்யணுமோ அதையனைத்தையும் செய்ய அவனுக்கு உரிமையுள்ளது. வரிகட்டுவது உன் கடமை. ஏன் இதேமாதிரி உன்னோடதொளபதிகிட்ட வாங்குன வரிக்கு கணக்கு கேளு மொதல்ல.


Kalyanaraman
நவ 26, 2024 10:03

தற்போது நடைமுறையில் உள்ளது போல் பாகிஸ்தான், பங்களாதேஷிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நமது இந்திய பான் கார்டு 2.0 வழங்கப்படுமா??


வைகுண்டேஸ்வரன்
நவ 26, 2024 09:50

ஒன்றிய அரசு பணத்தையும் நேரத்தையும் அனாவசியமாக வீணடித்துக் கொண்டிருக்கிறது. விமான நிலையம், சில ஓட்டல்கள், சில அரசுத்துறை அலுவலகங்கள் கூட PAN கார்டை ஒரு ஆவணமாக ஏற்பதில்லை. இதில் 2.0. இப்படி மாற்ற வேண்டும். கட்டணம் ரூ.50 என்பார்கள். 50, 50 ரூவாயாக 50, 50 பேரிடம், 50, 50 முறை ... பெரிய தப்பு தான்.


SRIRAM
நவ 26, 2024 10:20

அப்படியே தமிழ் நாட்டில் அரசாங்கம் வாங்கும் அதிகப்படியான வரிகளை பற்றியும் எழுதுங்க நண்பரே......


Ganapathy
நவ 26, 2024 11:01

ஆதார் எதுக்கு இருக்கு?


புதிய வீடியோ