உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு?

மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு?

புதுடில்லி: ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் என்கிற செய்தி, டில்லி வட்டாரங்களில் அடிபடுவது வழக்கமாகிவிட்டது. இப்போதும் இந்த பேச்சு தான். தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறிய பின், அடுத்த ஒரு வாரத்திலேயே மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாம். இந்த முறை மகளிருக்கு அதிக இட ஒதுக்கீடு உண்டு எனவும் சொல்லப்படுகிறது.அதாவது, 10 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்டால், அதில் ஆறு பேர் மகளிர் என, பிரதமர் மோடி முடிவெடுத்து விட்டாராம். தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாம்.இதற்கு கைமாறாக, லோக்சபாவில் சரத் பவார் கட்சியின் எட்டு எம்.பி.,க்கள் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும். இதற்கு, சரத் பவார் ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.தவிர, திரிணமுல் காங்கிரசின், 20 அதிருப்தி எம்.பி.,க்களும், பா.ஜ.,விற்கு ஆதரவாக ஓட்டளிப்பர். இதில் எட்டு பேர் பெண்கள். இவர்களுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் உண்டு என, பா.ஜ., தரப்பில் சொல்லப்படுகிறது.ஒரு பக்கம் மகளிருக்கு அதிக அமைச்சர் பதவிகள், இன்னொரு பக்கம் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு என, இரண்டு பக்கமும் அரசியல் செய்து கொண்டிருக்கிறது பா.ஜ., இந்த முறை மசோதா ஒருமனதாக நிறைவேறும் என, அக்கட்சியினர் உறுதியாக சொல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி