வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தியாவின் நலனுக்காக இரவு பகல் அயராது உழைக்கும் இந்தியாவின் அமைச்சர் குழு மந்திரிகள் அனைவருக்கும் நன்றி
புதுடில்லி: டில்லியில் பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, பாதுகாப்பு விவகாரங்கள், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த உடன்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 4வது முறையாக அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராணுவத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் நலனுக்காக இரவு பகல் அயராது உழைக்கும் இந்தியாவின் அமைச்சர் குழு மந்திரிகள் அனைவருக்கும் நன்றி