உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி காங்கிரஸ் பேசலாமா: பாஜ எம்.பி. கேள்வி

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி காங்கிரஸ் பேசலாமா: பாஜ எம்.பி. கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது எப்போது என்று காங்கிரஸ் உறுப்பினர் பேசியது வேடிக்கையாக இருந்தது என்று பாஜ எம்பி பைஜயந்த் ஜெய் பாண்டா கூறினார்.ஆபரேஷன் சிந்தூர் குறித்து லோக்சபாவில் விவாதத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்து பேசினார். அதை தொடர்ந்து காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகாய் பேசுகையில், ''பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நீண்ட விளக்கம் அளித்தார். ஆனால் பஹல்காமில் பயங்கரவாதிகள் எப்படி வந்தனர்,'' என்று கேள்வி எழுப்பினார்.காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசியதை தொடர்ந்து, பாஜ எம்பி பைஜயந்த் ஜெய் பாண்டா பேசியதாவது:பாகிஸ்தான் காஷ்மீரை எப்போது திரும்பப் பெறுவோம் என கவுரவ் கோகாய் கேட்ட போது அது வேடிக்கையாக இருந்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது பற்றி காங்கிரஸ் பேசலாமா? ரபேல் விமானங்களின் எண்ணிக்கை மற்றும் சீனா பற்றிய கேள்வியை அவர் குறிப்பிட்டதும் வேடிக்கையாக இருந்தது. இந்தியா 'குனிந்து போனது' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்,'சரணடைதல்' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியதும், சீனா பற்றிய கேள்வி தொடர்பாகவும் பேசியதால் அவரது கட்சி தலைவர் இன்று உற்சாகமாக இருப்பார். பல ஆண்டுகளாக காங்கிரஸ் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதில் எத்தனை முறை சரணடைந்துள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுவது அவசியமானது. அவரது சரண்டர் பேச்சு வேடிக்கையாக இருந்தது. ஆனால் கண்டிக்கத்தக்கது.இவ்வாறு பைஜயந்த் ஜெய் பாண்டா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜூலை 28, 2025 21:32

காங்கிரஸ் ஆட்சியில்தான் காஷ்மீர் ஆக்கிரமிப்பே நடந்தது. ஆக்கிரமிப்பு கூட சரியான வார்த்தை அல்ல. காங்கிரஸ் காஷ்மீரை பயங்கரவாதிகளுக்கு தாரைவார்த்து கொடுத்தது என்றுதான் கூறவேண்டும். அதைப்பற்றி அவர்கள் பேச தகுதியே இல்லை.


ஆரூர் ரங்
ஜூலை 28, 2025 19:40

1948 இல் காஷ்மீரில் பாதியை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்ததும் 1962 இல் சீனாவிடம் 70000 சதுர கிமி நிலத்தை பறி கொடுத்த தும் காங்கிரசு சாதனை? இப்போ பாகிஸ்தான் எத்தனை விமானங்களை இழந்தது என்று கேட்காமல் நமது இழப்பு பற்றி கூக்குரல் எழுப்புவது அசிங்க அரசியல்


Veera
ஜூலை 29, 2025 20:03

Aaror Rang always rocks


M Ramachandran
ஜூலை 28, 2025 19:06

அவர்கள் பாசம் எத்தகைய்யது என்பது பாகிஸ்தான் மற்றும் சீனா அறிந்துள்ளது.


chandran
ஜூலை 28, 2025 19:04

சரிங்க பைஜயந்த் ஜெய் பாண்டா.. காங்கிரஸ் முன்னாடி பண்ணினது எல்லாம் தப்பு தான். இப்போ அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.. சும்மா தலையை சுத்தி மூக்கை தொட்டு பழைய கதையை பேசி கொண்டு இருக்காதீங்க.


vivek
ஜூலை 28, 2025 19:38

அறிவிலி...காங்கிரஸ் பண்ண தப்ப ஒத்துக்கோ....


Srini
ஜூலை 28, 2025 21:02

Chandran, you are definitely an idiot, stop reading Mursoli and Daily Dhadhi, sorry Daily Thandhi. if you are part of them , there is nothing we can expect


முக்கிய வீடியோ