உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐகோர்ட் நீதிபதி மீதான புகாரை லோக்பால் விசாரிக்க முடியுமா?

ஐகோர்ட் நீதிபதி மீதான புகாரை லோக்பால் விசாரிக்க முடியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : உயர் நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் புகாரை லோக்பால் அதிகாரிகள் விசாரிக்கலாம் என்ற உத்தரவின் செல்லுபடியாகும் தன்மை குறித்து விசாரிக்கும் விவகாரத்தில், நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமாரை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.தனிநபருக்கும், தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான வழக்கில், அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக, உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் கூடுதல் நீதிபதி மீது, லோக்பால் அமைப்பில் ஊழல் புகார் அளிக்கப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான லோக்பால் அமர்வு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது சுமத்தப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளதாக ஜன., 27ல் உத்தரவு பிறப்பித்தது.இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், லோக்பால் உத்தரவுக்கு பிப்., 20ல் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த உத்தரவு மிகுந்த கவலை அளிப்பதாகவும் தெரிவித்தது.இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கும், நீதிபதிகள் மீது புகார் அளித்தவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், புகார் கூறப்பட்டுள்ள நீதிபதிகளின் பெயர் விபரங்களை வெளியிடவும் தடை விதித்தது.இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அபய் எஸ்.ஒகா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர் சார்பில் நீதிமன்றத்துக்கு உதவ, மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமாரை நீதிபதிகள் நியமித்தனர். இந்த வழக்கில், லோக்பால் அமைப்பின் அதிகார வரம்பு குறித்து மட்டுமே நீதிமன்றம் ஆராயும், மாறாக குற்றச்சாட்டின் தகுதி குறித்து நீதிமன்றம் ஆராயாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kalyan
மார் 19, 2025 14:41

இதுதான் நம் நீதி மன்றங்களின் நடு நிலைமை. அவர்களில் நீதிபதிகளில் ஒருவர் விசாரணைக்கு உள்ளாகிறார் என்றதும் உச்ச மன்றம் தானாக முன்வந்து வழக்கை கையில் எடுக்கிறது. அதுவே தமக்கு முன் குவிந்துகிடக்கும் பல வழக்குகள் இன்னும் விசாரணைக்கே எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பது பற்றி உச்ச நீதி மன்றம் கவலைப்படுகிறதா? லோக்பாலின் தீர்ப்பை விசாரணைக்குப்பிறகு குறிப்பிட்ட நீதிபதி உச்ச மன்றத்தில் சவால் Challenge விடும்போது இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமே ?


sethu
மார் 21, 2025 10:01

உச்ச நீதி அன்றத்திலும் கருநிதியின் கொள்கை அதாவது விங்ஹான திருடனின் வாரிசுகள் நாடு நாசமாகப்போகும் .


Anbuselvan
மார் 19, 2025 12:06

அப்படியே அரசு அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், முதன்மை அமைச்சர், கவர்னர் எல்லோர் மீதான புகார்களையம் லோக்பால் விசாரிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளதா என தெரிவித்தால் உதவியாக இருக்கும்


GURU GURU
மார் 19, 2025 08:37

லோக்பாலுக்கு ஐகோர்ட் நீதிபதியை விசாரிக்கும் அதிகாரம் உண்டு


GURU GURU
மார் 19, 2025 08:34

லோக்கல் என்பது சட்டத்திற்குட்பட்ட அதிகார வரம்பு ,ஊழல் குறித்து யாரையும் விசாரிக்கும் உரிமை உள்ளது


GMM
மார் 19, 2025 07:56

லோக்பால் நீதிபதியை விசாரிக்க அதிகாரம் அளிக்க வேண்டும். வக்கீல் வாத அடிப்படையில் தான் நீதிபதியின் தீர்ப்பு. தன் கட்சி காரர் கூறும் விவரம் அடிப்படையில் வக்கீல் மனு தயாரிக்கிறார். இதில் வழக்கை திசை திருப்பி, பணமாக்க முடியும். ? நீதிபதி மீது புகாரை லோக்பால் விசாரிக்க வேண்டும். வக்கீல் மீது புகாரை தனி பிரிவு ஏற்படுத்தி, சிபிஐ விசாரிக்க வேண்டும். நீதிமன்றம் நிர்வாக விதிமுறைகள் வகுத்து, பணி புரிய வேண்டும்.