உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்து சொத்துக்களை நிர்வகிக்க பிற மதத்தினரை அனுமதிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

ஹிந்து சொத்துக்களை நிர்வகிக்க பிற மதத்தினரை அனுமதிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

'வக்ப் சொத்துக்களை உறுதிப்படுத்தும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களுக்கு கொடுத்தது எந்த வகையில் நியாயம்; ஹிந்து மத சொத்துக்களை நிர்வகிக்கும் குழுவில் பிற மதத்தை சேர்ந்தவர்களையும் அனுமதிக்க முடியுமா?' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 90-க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் ஒன்றாக சேர்த்து நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார். அவர் வாதிட்டதாவது:அரசியல் சாசன பிரிவு - 26, மதம் சார்ந்த நிறுவனங்களை உருவாக்குவதற்கு அனுமதி வழங்குவதோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கான சொத்துக்களை வாங்கவும் நிர்வகிக்கவும் வழிவகை செய்கிறது. இந்த பிரிவை தான் புதிய சட்டம் மீறுகிறது.

சுலபமில்லை

புதிய சட்டத்தின்படி ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் மட்டும்தான், அவரால் வக்ப்க்கு சொத்துக்களை கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒருவர் எந்த மதத்தை எவ்வளவு நாள் பின்பற்றுகிறார் போன்ற விபரங்களை அரசுகள் கேட்க அதிகாரம் கிடையாது. பிறப்பாலேயே முஸ்லிமாக இருக்கக்கூடியவர்களிடம் எப்படி ஆதாரங்களை சமர்ப்பிக்க சொல்லலாம்.ஒரு சொத்து வக்ப் சொத்தா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரம் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கலெக்டர் அரசால் நியமிக்கப்படுபவர். இது, ஒரு நீதிபதி தனக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதற்கு சமமானது. புதிய சட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள வக்ப் வாரியங்கள் மற்றும் ஆணையங்களில் ஹிந்துக்களும் பங்கெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. வக்ப் பத்திரம் கட்டாயம் என புதிய சட்டம் கூறுகிறது. அது எப்படி சாத்தியமாகும். இவ்வாறு அவர் வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'அதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது? பத்திர பதிவு செய்யப்பட்டிருந்தால் போலிகளை தடுக்க முடியும் தானே' என்றனர்.அதற்கு பதில் அளித்த கபில் சிபில், ''அது சுலபமானது கிடையாது. 300 ஆண்டுகளுக்கு முந்தைய வக்ப் சொத்துக்கு இப்போது பத்திரம் கேட்டார்கள் என்றால் அதற்கான ஆதாரங்களை யாரால் எங்கிருந்து திரட்டி தர முடியும்,'' என்றார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ''பார்லிமென்ட் கூட்டு குழுவால் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வுகள் நடத்தப்பட்டு இரு சபைகளிலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்பான விவகாரத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்,'' என வாதங்களை துவங்கினார்.

தெளிவில்லை

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'நீங்கள் கொண்டு வந்துள்ள புதிய சட்டம், முஸ்லிம்கள் அல்லாதோரும் நிர்வாக குழுவில் உறுப்பினர்களாக இருக்கலாம் என கூறுகிறது. ஹிந்து மத கோவில்களை ஹிந்துக்கள் அல்லாதோர் நிர்வகிக்கின்றனரா? அதற்கான உதாரணங்கள் ஏதேனும் உள்ளதா? 'வக்ப் சொத்தை உறுதி செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்திருக்கிறீர்கள். மாவட்ட கலெக்டர் என்பவர் அரசால் நியமிக்கப்பட்டவர். அப்படி இருக்கும்போது அவருடைய செயல்பாடுகள் எப்படி நேர்மையுடன் இருக்கும்?' என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த துஷார் மேத்தா, ''வக்ப் சொத்து பிரச்னைக்குரியதாக மாறுகிறது என்றால் அதை நீதிமன்றங்கள் விசாரணைக்கு உட்படுத்த முடியும்,'' என்றார்.இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், 'புதிய சட்டத்தில் சில வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதற்கு உண்மையான அர்த்தம் என்ன? உதாரணத்திற்கு பிரச்னைக்குரிய பகுதி என்ற ஒரு வார்த்தை இருக்கிறது.'நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே ஒரு விவகாரத்தை பிரச்னைக்குரியது என வகைப்படுத்த முடியுமா? ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்வதற்கு முன்பாக சொத்து பரிமாற்றம் தொடர்பான பொதுச்சட்டம் எதுவும் கிடையாது.'ஆனால் அதற்கு முன்பே 13, 14 மற்றும் 15ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட மசூதிகள் பலவும் இன்றும் இருக்கின்றன எனில் அவற்றை எந்த வகையில் வகைப்படுத்துவது. ஒரு நிலம் வக்ப்க்கு சொந்தமானது என ஒருவர் கூறுகிறார். எங்களுக்கு சொந்தமானது என அரசு சொல்கிறது.

இடைக்கால தடை

'ஆனால் அதை உறுதிப்படுத்தும் அதிகாரம் அரசு அதிகாரியான மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்படுகிறது. அடுத்தது என்ன நடக்கும் என்பதை தெளிவாக கணிக்க முடிகிறது. 'உங்கள் புதிய சட்டத்தில் உள்ள அடிப்படை அம்சங்களை வைத்துப் பார்த்தால், ஹிந்து மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் குழுவில் இஸ்லாமியர்கள் பங்கெடுக்கலாம் என்பதை வெளிப்படையாக சொல்ல வருகிறீர்கள் என எடுத்துக் கொள்ளலாமா?' என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, ''நீங்கள் அப்படி கருதுவீர்களேயானால் இந்த அமர்வு இந்த வழக்கை விசாரிக்க முடியாது,'' என, துஷார் மேத்தா தெரிவித்தார்.இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், 'நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள், எங்களை மதத்துடன் தொடர்புபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. 'முஸ்லிம் சொத்துக்களை நிர்வகிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் குழுவில் முஸ்லிம் அல்லாதோர் இருக்கும்போது ஹிந்துக்களின் சொத்துக்களை நிர்வகிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் குழுவில் ஹிந்துக்கள் அல்லாதோர் ஏன் இருக்கக் கூடாது' என கேள்வி எழுப்பினர்.மேலும், இந்த புதிய சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர். புதிய வக்ப் சட்டத்தின் படி நிர்வாக குழுவில் முஸ்லிம்கள் அல்லாதோர் இடம்பெறுவதை அனுமதிப்பது மற்றும் ஏற்கனவே நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட வக்ப் சொத்துக்களை புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வராமல் இருப்பது போன்ற ஷரத்துகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதிக்கலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். இதற்கு மத்திய அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நேற்றைய அலுவல் நேரம் நிறைவடைந்ததை அடுத்து, விசாரணை இன்று மதியம் 2:00 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது-டில்லி சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

பெரிய ராசு
மே 04, 2025 10:50

நாட்டை இரண்டக்க பிரித்து ஒன்று முசுலீமுக்கு மற்றது பொது அப்படீன்னா இந்துக்கள் மட்டும் இளிச்சவாயன் அப்படித்தானே எசமான் ,


Giri V S
ஏப் 20, 2025 17:20

இப்பொழுதும் இந்து சமய சொத்துகளை ஹிந்து என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு கடவுள் மறுப்பாளர்களும் கிருத்துவர்களும் இஸ்லாமியர்களும்தான்நிர்வகிக்கின்றனர்.


R.Varadarajan
ஏப் 17, 2025 17:04

இந்து கோவிலான திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவராக ஆந்திர முதல்வரின் உறவினரான ஒரு கிறித்தவர் ஐந்து வருடங்கள் பதவி வகிக்கவில்லையா? தமிழக இந்து அறநிலையத்துறையில் வேலை செய்பவர்கள் எல்லோருமே இந்துக்களா, குருத்துவர்கள் இல்லையா?


Muralidharan S
ஏப் 17, 2025 15:58

தமிழக கோவில்களிலும், அறநிலைத்துறையிலும் ஹிந்துக்கள் என்ற போர்வையில் மாற்றுமத பேர்வழிகள் உள்ளே நுழைக்கப்பட்டனர்.. ஏன்.. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கூட மாற்று மதத்த்தினரை வெளியேறச்சொல்லி சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார். ராஜசேகர ரெட்டி மாற்றும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டை போலவே மாற்று மதத்தினர் ஹிந்து கோவில்களிலும் எதிரி கட்சி அரசாங்கங்களால் நுழைக்கப்பட்டனர்.. இதுவும் ஒரு வகையில் நவீன கால இஸ்லாமிய / கிறிஸ்த்துவ படையெடுப்பே.. இதை எல்லாம் எந்த நீதிமன்றங்களும் சராமாரியாக கேட்காதா... ஒரு இஸ்லாமிய / கிறிஸ்த்துவ வழிபாட்டு தளங்களில் இருந்து வரும் வருமானத்தை எடுத்து ஹிந்துக்களுக்கோ அல்லது பொது செலவோ செய்யமுடியுமா.. ஆனால் ஹிந்து ஆலய வருமானங்களை மட்டும் அரசாங்கங்கள் வாரி சுருட்டி கணக்கு வழக்கு இல்லாமல் கார், ஏசி அது இது என்று வாங்கி கண்டவழிகளில் இஷ்டத்திற்கு அரசாங்கம் செலவு செய்து கொண்டு இருக்கிறதே.. இதை எல்லாம் எந்த நீதிமன்றங்களும் சராமாரியாக கேட்காதா. ஹிந்து ஆலயங்களில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை தங்கத்தை கணக்கு வழக்கு இல்லாமல், வெளிப்படை தன்மை இல்லாமல் உருக்கி உரு தெரியாமல் செய்துகொண்டு இருக்கிறதே.. இதை எல்லாம் எந்த நீதிமன்றங்களும் சராமாரியாக கேட்காதா...


Balaji Radhakrishnan
ஏப் 17, 2025 15:22

பாராளுமன்ற விவகாரங்களில் எப்படி நீதிமன்றங்கள் தலையிட முடியும்? இப்பொழுது இருக்கும் நீதிபதிகளுக்கு தெரியாதா? இப்பொழுது எல்லாம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மத்திய அரசுக்கு எதிராக உள்ளது. நீதிபதிகள் தவறு செய்கின்றனர்.


Venkatesan Srinivasan
ஏப் 18, 2025 15:49

Judicial over reach. Why the Judges frequently connect Hinduism to Islamic? Why other religions like Christianity, Jews, Sikhism, Buddhism doesnt come to their thoughts?


Rajarajan
ஏப் 17, 2025 13:11

சுமார் ரெண்டாயிரம் வருஷமா, பிராமணன் மற்ற பிரிவினரை அடிமையா வைத்திருந்தானு சொல்றப்போ, அதுக்கு ஆதாரம் எங்கேன்னு யாராச்சும் கேட்டு தெளிவு பெற்றதுண்டா? அதுபோல தான் இதுவும். ஆதாரம் இருந்தால், வக்ப் சொத்து. இல்லையேல் அரசின் சொத்து.


SIVA
ஏப் 17, 2025 11:32

அரசால் நியமிக்கப்பட்ட கலெக்டர் நியாமாக இருக்க மாட்டார், அப்ப அரசால் நியமிக்கப்பட்ட போலீஸ் மற்ற அணைத்து அரசு அலுவலர்களும் நியாமாக இருக்க மாட்டார்கள், அப்ப நாங்க எல்லாரும் எங்களுக்கு நல்லது செய்யும் ஒரு கட்ட பஞ்சாயத்து டீம் ரெடி பண்ணி அது மூலமாகவேய எல்லாம் விஷயத்தையும் பேசி தீர்த்து கொள்ளலாமா ....


GMM
ஏப் 17, 2025 09:44

வக்ஃபு சொத்து போன்ற எந்த சொத்துக்கும் நீதிமன்றம் அங்கீகாரம் கொடுக்க முடியாது. நீதிமன்றத்தில் மூல ஆவணங்கள் இருக்காது. அங்கீகார பரிந்துரை சட்டம் ஆகாது. சட்டம் தான் எல்லா மக்களையும் கட்டுப்படுத்தும். நீதிமன்ற பரிந்துரை வாதி, பிரதிவாதி மட்டும் கட்டுப்படுத்தும். வாதி, பிரதிவாதி தனிநபர். கலெக்டர், கவர்னர் போன்ற அரசு பதவிகள் சட்டபடி, பிரதிவாதி ஆக்க முடியாது.. இடைக்கால தடை காரணம் இல்லாமல் / அரசு ஒப்பு கொள்ளாமல் விதிக்க முடியாது. சில நீதிபதிகள் நிர்வாகத்தை முடக்கி, அதிகாரம் கைபற்ற ஆசை பட்டு வருகின்றனர். இது மத்திய அரசு கவலை பட வேண்டிய விசயம்.


SIVA
ஏப் 17, 2025 08:54

பழைய சட்டத்தில் WAQBU வாரிய உத்தரவை எதிர்த்து கோர்ட் செல்ல முடியாது என்று உள்ளது , அது உண்மை என்றால் இந்த பைத்தியகார தனமான , அயோக்கித்தனமான சட்டம் பற்றி ஏன் இது வரை நீதி மன்றம் கேள்வி எழுப்ப வில்லை , இதை பற்றி பேசும் தையறியும் யாருக்காவது இதுவரை ஏன் வர வில்லை , ஏம்ப்பா அந்த சட்டத்துல கோர்ட் போக முடியாது என்று ஒரு பாயிண்ட் உள்ளது போன்று இந்த சட்டத்தையும் எதிர்த்து யாரும் கோர்ட் போக முடியாது என்று ஒரு பாயிண்ட் சேருங்கள் .....,


SIVA
ஏப் 17, 2025 08:45

மாவட்ட ஆட்சியர் என்பவர் நீதிபதிக்கு சமமாவார் , அவருக்கு ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அதிகாரம் உள்ளது , அவரை நீதி மன்றங்கள் நம்பவில்லை என்றால் நாங்கள் மட்டும் நம்ப வேண்டுமா , அப்ப நாங்க என்ன இளிச்ச வாயனுங்களா .....


சமீபத்திய செய்தி