உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி

இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: இன்று (ஜூன் 1) முதல் வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்து உள்ளது.பொதுவாக அனைத்து வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக்கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லாவிட்டால், அதற்கு என தனி அபராதம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.பொதுத்துறை வங்கியான கனரா வங்கியை பொறுத்தவரை, நகரம் மற்றும் மெட்ரோ நகரங்களில் உள்ள கிளைகளில் ரூ.2 ஆயிரம், சிறிய நகரங்களில் உள்ள கிளைகளில் ரூ.1,000கிராம பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் ரூ.500 என குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அதற்கு ரூ.25 முதல் ரூ.45 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், அனைத்து சராசரி மாதாந்திர இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறையை கனரா வங்கி ரத்து செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கனரா வங்கி தான் முதல்முறையாக இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த அபராதமும் இல்லாமல் வங்கிக்கணக்குகளை பணமின்றி பராமரிக்க முடியும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனரா வங்கி கூறியுள்ளது.சராசரி மாதாந்திர இருப்புத்தொகை பராமரிக்க தேவையில்லை என்ற முடிவால்சேமிப்புக் கணக்குகள்சம்பள கணக்குகள்என்ஆர்ஐ எஸ்பி கணக்குகள் வைத்து இருப்பவர்கள் பயன் அடைவார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sridhar
ஜூன் 02, 2025 20:51

அப்படின்னா உன் பணத்தை வீட்லயே வெச்சிக்க வேண்டியது தானே.


sd tailor
ஜூன் 02, 2025 09:54

நல்ல திட்டம் மற்ற வங்கிகளும் இவ்வாறு செயல்பாடே கட்டும்


அப்புசாமி
ஜூன் 01, 2025 22:08

அந்த பாஞ்சி லட்சம் வரட்டும். லட்ச ரூவா பேலன்ஸ் மெயிண்டெயின் பண்ணறேன்.


அப்பாவி
ஜூன் 01, 2025 22:06

2019 லிருந்தே எல்லாத்தையும் உருவியாச்சு. இப்போ ஜீரோ பேலன்ஸ்னு ஆசையைத் தூண்டுவாங்க. ஆயிரம் ருவா சேந்தப்புறம் மினிமம் பாலன்ஸ் ஆயிரம்னு ஒசத்தி, மாசாமாசம் பணம் போட்டு எடுக்கலைன்னா 100 ரூவா உருவிடுவோம்னு ஆர்.பி.ஐ சொல்லும். இதுதானே இவிங்க பொழப்பு.


தமிழன்
ஜூன் 01, 2025 21:19

நீண்ட நாள் வாடிக்கையாளர்கள் இந்த வங்கி சேவையில் பயன் பெறுவார்கள்


Natarajan Ramanathan
ஜூன் 01, 2025 19:42

தினம்தோறும் பத்து ரூபாய் அதிகம் கொடுக்கும் மக்களுக்கு ஒரு வங்கி கணக்கில் ஐநூறு ரூபாய்கூட வைக்க முடிவதில்லை என்பது வியப்பாக இருக்கிறது.


சுந்தர்
ஜூன் 01, 2025 16:52

எல்லாரும் கனரா வங்கியில் கணக்கு வச்சுக்குங்க.


Baskaran
ஜூன் 01, 2025 16:39

அடிசான்யன்யா சிக்ஸரு நல்ல விஷயம்


ஆரூர் ரங்
ஜூன் 01, 2025 15:44

ZERO பாலன்ஸ் கணக்குகளையும் நிர்வகிக்க வங்கிகளுக்கு ஏராளமான( சம்பளம், சாப்ட்வேர், பாதுகாப்பு, வாடகை etc)நிர்வாக செலவுகள் உண்டு. இனிமேல் அச்செலவுகளை டெபாஸிட்டர் மற்றும் வங்கிக்கடன் வாடிக்கையாளர்கள் தலைகளில் கட்டிவிடுவார்கள். மனசாட்சியுள்ள யாரும் அனாவசியமாக காலி கணக்குகளை வைத்திருக்கமாட்டார்கள்.


V Venkatachalam
ஜூன் 01, 2025 18:15

ரங்கண்ணே, நீங்க சொல்றது சரிதான்.சேமிப்பு கணக்குக்கு வங்கிகள் தரும் வட்டி சித்தெறும்பு அளவுதான்.நடப்புக் கணகாகுகளுக்கு அந்த வட்டி கூட கிடையாது.ஆனால் ஒரு 18 வகையான கட்டணங்கள் என்று சொல்லி கன ஜோராக வசூல் பண்ணி விடுவார்கள்.அதே சமயம் அந்த நடப்பு கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கிறேன் பேர்வழி ன்னு சேட்டு லெவலுக்கு வட்டி வாங்கி விடுவார்கள்.ஆகவே என்னுடைய தாழ்மையான கருத்து மினிமம் பேலன்ஸ் இல்லைன்னு சொல்லி கஸ்டமர் தலையில் மொளகா அரைக்கறதை விட்டு விடலாம்.


Padmasridharan
ஜூன் 01, 2025 15:43

மத்த வங்கிகள் இதை வெச்சே மக்களிடம் அதிக பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இதனால் வேலை செய்துக் கொண்டிருப்பவர்கள் வேலை இல்லாமல் இருக்கும்போதும், நோய்வாய்ப்பட்டிருக்கும்போதும் அந்த குறைந்த பணத்தை maintain செய்ய முடிவதில்லை என்பதை அறிந்துகொள்ளமாட்டேன் என்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை