உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புகை உயிருக்கே பகை; ஒரே ஆண்டில் 5.5 லட்சம் பேர் உயிரிழப்பு: ஆய்வில் அதிர்ச்சி

புகை உயிருக்கே பகை; ஒரே ஆண்டில் 5.5 லட்சம் பேர் உயிரிழப்பு: ஆய்வில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் புகைப்பிடிப்பதால் கடந்த ஆண்டில் மட்டும் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.புகைப்பது, சரக்கு அடிப்பது எல்லாம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றே சொல்லலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புகை புகைப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் உடல்நலக் கோளாறுகள் குறித்து ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது.

5.5 லட்சம் பேர்

ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் புகை பிடிப்பதால் கடந்த ஆண்டில் மட்டும் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாட்டில் 7.7 சதவீதம் மக்கள் புகையிலை பயன்படுத்துகின்றனர்.சத்தீஸ்கரில் மட்டும் 11,011 பேர் உயிரிழந்தனர். இங்கு வசிக்கும் மக்களில் 4 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பீடி குடிக்கின்றனர்.

பாதிப்புகள் என்னென்ன?

உத்தரபிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மஹாராஷ்டிராவில் 50 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 42 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர். புகைப்பதால் 0.39% நுரையீரல் புற்றுநோயும், 0.20% காசநோயும், 0.32% வாய் புற்றுநோயும், 0.17 % இதய பாதிப்பும் ஏற்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சிகரெட்டை விட பீடி குறைந்த விலையில் கிடைப்பதால் அதிக பேர் பயன்படுத்துகின்றனர் என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பிரேம்காந்த்
செப் 09, 2024 21:36

எனக்கு தெரிஞ்ச தாத்தா புகை பிடிப்பவர். வயசு 90. இன்னும் நல்லாத்தான் இருக்காரு.


அப்பாவி
செப் 09, 2024 21:35

பொல்யூஷன்லேயே எக்கச்சக்கமா செத்துப் போறாங்க. தனியா புகை பிடிற்றால் கொஞ்சம் சீக்கிரமா போயிருவாங்க.


Srinivasan Krishnamoorthi
செப் 09, 2024 16:56

3 டிரில்லியன் சிகரெட்டுகள் விற்பனை ஆகின்றன. குறைந்தது 3-4 கோடி பேர் இறந்திருக்க வேண்டும். புள்ளி விவரம் தவறு


God yes Godyes
செப் 09, 2024 14:19

புகை உயிருக்கு பகையா.புண் பட்ட நெஞ்ச புகை வுட்டு ஆத்துவது தப்பா


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 09, 2024 14:01

மருத்துவ ரீதியாகப்பார்த்தால் புகை பிடிப்பது மட்டுமே - நேரடியாக - மரணத்தைக் கொண்டு வருவதில்லை ....


P. VENKATESH RAJA
செப் 09, 2024 13:46

புகை பிடிப்பது உயிருக்கு ஆபத்து என தெரிந்தும் பலரும் அடிமையாக இருப்பது திருத்த முடியாத ஒன்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை