உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசோக் மீதான வழக்கு; சுப்ரீம் கோர்ட் அதிரடி

அசோக் மீதான வழக்கு; சுப்ரீம் கோர்ட் அதிரடி

கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் அசோக் மீதான நில முறைகேடு வழக்கில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி லோக் ஆயுக்தாவுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் அசோக். இவர், கடந்த 1998 முதல் 2006ம் ஆண்டு வரை பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள அரசு நிலங்களை முறைப்படுத்தும் குழுவின் தலைவராக இருந்தார். அப்போது தகுதியற்ற பயனாளிகளுக்கு, அரசு நிலத்தை சட்டவிரோதமாக விடுவித்ததாக அசோக் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சமூக ஆர்வலர் ஆனந்த், ஊழல் தடுப்பு படையில் புகார் செய்தார்.அசோக் மீது வழக்குப் பதிவானது. வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு மீது விசாரணை நடந்தது. அசோக் தரப்பு வக்கீல், 'என் மனுதாரர் எந்த தவறும் செய்யவில்லை. அரசியல் பழிவாங்கும் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு பதிவாகி உள்ளது' என்று கூறினார்.அரசு தரப்பும் வாதங்களை முன்வைத்தது. இந்த வாதங்கள் ஏற்கப்பட்டு, அசோக் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, கடந்த 2018 ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனால் உச்சநீதிமன்றத்தில் அசோக் மேல்முறையீடு மனு செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி, லோக் ஆயுக்தாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ