உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவன் கன்னத்தில் அறை தலைமை ஆசிரியர் மீது வழக்கு

மாணவன் கன்னத்தில் அறை தலைமை ஆசிரியர் மீது வழக்கு

காசர்கோடு: கேரளாவில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர், 10ம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அடித்ததில் அவனது செவிப்பறை கிழிந்தது. இதையடுத்து, ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள குண்டம்குழி என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், கடந்த 11ம் தேதி இறைவணக்கம் பாடுவதற்காக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் குழுமியிருந்தனர். அப்போது, 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் கால்களால் கீழே கிடந்த கூழாங்கற்களை மிதித்து விளையாடி கொண்டிருந்தான். அதை கவனித்த தலைமை ஆசிரியர், மாணவனை அருகே அழைத்து கன்னத்தில் அறை விட்டார். வலியால் அலறி துடித்த அவன் வீட்டுக்கு சென்று காது வலிப்பதாக தெரிவித்துள்ளான். இதையடுத்து மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் அவன் செவிப்பறை கிழிந்தது தெரியவந்தது. மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கேரளாவில் உள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் உறுப்பினர்களும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், மாநில பொதுக்கல்வி துறை அமைச்சர் சிவன் குட்டி, மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ganesh
ஆக 20, 2025 12:36

Good. The police should arrest the Headmaster.


Chandru
ஆக 20, 2025 09:46

It s wrong and an exaggerated news. The students of present days do not even know what is discipline. They know everything except their own study materials. India will definitely have millions of citizens without any human values in future. It is a shame on present day education


Padmasridharan
ஆக 20, 2025 08:03

தலைமை ஆசிரியர் தலையில்லாதவரோ..நல்வழி நடத்த எத்தனையோ வழிகள் இருக்க ஏன் இந்த வகுப்பறைக்குள் அறையை விட்டார். .


ديفيد رافائيل
ஆக 20, 2025 07:21

அடிக்கலாம் தப்பில்லை, அதுக்காக ரத்தம் வர்ற அளவுக்கா அடிக்குறது. இது தான் வன்முறை.


Modisha
ஆக 20, 2025 06:40

கேரள பள்ளியில் இறைவணக்கம் தானே . ‘ அந்த ‘ ரொட்டி பால் மதத்துக்காரங்க வேலை தான்.


புதிய வீடியோ