உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11 பேர் உயிரிழந்த விவகாரம்: பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது பாய்ந்தது வழக்கு

11 பேர் உயிரிழந்த விவகாரம்: பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது பாய்ந்தது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் 18 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை வென்ற ஆர்.சி.பி., எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரவேற்க சின்னசாமி மைதானம் முன் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் நெரிசலில் சிக்கி ஆறு பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கர்நாடக ஐகோர்ட், மாநில அரசுக்கு கிடுக்கிப்பிடியான கேள்வியை எழுப்பி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9kbt5k3v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த டிஎன்ஏ பொழுதுபோக்கு நிறுவனம் மீது கர்நாடக போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 105 உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கை சிஐடி விசாரணைக்கு மாற்றுவது தொடர்பாக மாநில அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்த உள்ளது.இந்நிலையில், 11 பேர் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசால் நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதி ஜெகதீசா கூறுகையில், கர்நாடக கிரிக்கெட் சங்கம், பெங்களூரு அணி நிர்வாகம், கர்நாடக மெட்ரோவுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர், கூட்டநெரிசல் ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
ஜூன் 06, 2025 16:02

படித்தவர்கள் ஐ பி எல் வெற்றி கூட்ட நெரிசலில் போய் சாவார்கள், படிக்காதவர்கள் கும்பமேளா கூட்ட நெரிசலில் போய் சாவார்கள்!


theruvasagan
ஜூன் 06, 2025 14:21

சினிமாவோ விளையாட்டோ ரசிகனாக இல்லாமல் வெறியனாக இருந்தால் நஷ்டம் அவனுக்கே. இவனுக மேலே பச்சாதாப்படுவது மடத்தனம்.


RAAJ68
ஜூன் 06, 2025 08:16

இந்த வெற்றிக்கு கர்நாடகக்காரர்கள் காரணம் அல்ல. கர்நாடக மாநிலத்தை சாராத மற்ற மாநிலங்கள் வீரர்கள் அயல்நாட்டு வீரர்கள் தான் காரணம். அப்படி இருந்தும் இவர்களுக்கு ஒரு வெறி கன்னட வெறி. சென்னை அணி ஐந்து முறை வெற்றியடைந்த போதும் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததா.


Puratchi Thondan
ஜூன் 06, 2025 07:21

1 கிரிக்கெட் மைதானங்கள் மாநிலங்களின் சொத்து, வாரியம் அவற்றை குத்தகைக்கு எடுக்கிறது. 2 கிரிக்கெட் வாரியம் தன்னுடைய லாபத்திற்கு வருமான வரி செலுத்துவதில்லை, ஏனெனின் அது இந்தியாவில் கிரிக்கெட்டை வளர்க்கும் தொண்டு நிறுவனமாம். இந்த இரண்டு விஷயங்களை ஒழித்தலே இந்த கிரிக்கெட் மடத்தனத்திற்கு முடிவுகட்ட ஒரு நல்ல ஆரம்பம்.


RAMESH
ஜூன் 06, 2025 06:12

தமிழகத்தில் கள்ள சாராயம் குடித்து விட்டு இறந்தால் 10 லட்சம்...அதே போல் அங்கும் பணத்தை கொடுத்து புண்ணியம் தேடுவார்கள் அரசியல் வியாபாரிகள்.....


KavikumarRam
ஜூன் 05, 2025 21:01

இந்த சூதாட்ட விளையாட்டை இவ்வளவு மடத்தனமாக கொண்டாடிய மக்கள் மீதும் நீதிமன்றம் வழக்கு பதியவேண்டும்.மக்கள் இவ்வளவு முட்டாள்களா என்று நினைத்து நெஞ்சம் கொதிக்கிறது.தங்கள் சொந்த காசை,ஏற்கனவே முடிவெடுக்க பட்ட இந்த சூதாட்ட போட்டிக்கு செலவழித்து ,வெளிநாட்டுக்காரனுக்கும் அள்ளி அள்ளி பணத்தை கொட்டிக்கொடுத்து, போட்டியின் போது தொண்டை கிழிய கத்தி கும்மாளம் போட்டது போதாதுன்னு இந்த வெற்றிவிழாகொண்டாட்டத்துக்கும் தன் சொந்தக்காசில் சாவை நோக்கி சென்ற இந்த கேடுகெட்ட மடையர்கள் சாகவேண்டியவர்கள் தான்.


m.arunachalam
ஜூன் 06, 2025 00:46

மிக மிக சரியாக சொல்லியுள்ளீர்கள் . மக்களை சுரண்டும் தீர்மானிக்கப்பட்ட வெற்றிக்காக விளையாடும் விளையாட்டுதான் .


Bhakt
ஜூன் 05, 2025 20:57

Natioal Shame. Cricket is a overhyped game. Cricket players are overhyped and over paid. Jumping Monkey Kohli thats how he behaved in Australia and referred so by Australian media and his Bellywood wife are useless junks.


m.arunachalam
ஜூன் 06, 2025 00:48

Cold blooded......


theruvasagan
ஜூன் 05, 2025 20:41

கிரிக்கெட் சங்கம் மட்டும்தான் பொறுப்பா. கூட்டம் கூட காரணமாக இருந்த அரசியல் வியாதிகளுக்கு பொறுப்பில்லையா.


Krishnamurthy Venkatesan
ஜூன் 05, 2025 20:36

உயிரிழந்தவர்கள் அனைவரும் படித்த முட்டாள்கள்.


thanventh R
ஜூன் 05, 2025 20:29

This is total failure of state government . Public production and there no precautions taken


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை