உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் சட்டத்திற்கு எதிரான வழக்குகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வக்ப் சட்டத்திற்கு எதிரான வழக்குகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி: வக்ப் சட்டத்திற்கு எதிராக காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஓவைசி கட்சி, அகில இந்திய முஸ்லிம் லீக், திமுக உள்ளிட்ட கட்சிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eykwykyq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். இன்று வழக்கு விசாரணை தொடங்கியது.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுதாரர்களில் ஒருவருக்காக மூத்த வக்கீல் கபில் சிபலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வியும் தங்களின் வாதத்தை முன் வைத்தனர். கபில் சிபில் வாதம்; முஸ்லிம் மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. 1995 வக்ப் சட்டத்தை முழுமையாக மாற்றும் விதமாக தற்போதைய சட்டத்திருத்தம் உள்ளது. வக்ப் திருத்தச் சட்டத்தில் உள்ள அனைத்தும் எதிராகவே உள்ளன. 20 கோடி முஸ்லிம்களின் உரிமைகளை பார்லிமென்ட் பறித்துள்ளது. வக்ப் வாரிய உறுப்பினர்களாக இதுவரை முஸ்லிம்களே இருந்து வருகின்றனர். த.வெ.க., தரப்பு வக்கில் அபிஷேக் சிங்வி வாதம்; 8 லட்சத்திற்கும் அதிகமான வக்ப் சொத்துக்களை கையகப்படுத்தும் நோக்கில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பார்லிமென்ட் கட்டடம் கூட வக்ப் சொத்து என்று கூறுகின்றனர். அனைத்துமே கட்டமைக்கப்பட்ட கதை. எதை வேண்டுமோனாலும் வக்ப் சொத்து என்று உரிமை கொண்டாட முடியாது. வக்ப் சொத்துக்களை கலெக்டர்கள் தீர்மானிப்பது என்பது முடியாத காரியம். தி.மு.க., வக்கில் வில்சன் வாதம்; வக்ப் திருத்தச் சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. 5 ஆண்டுகள் மதத்தை பின்பற்றினால் தான் நன்கொடை வழங்க முடியும் என்பது ஏற்புடையதல்ல. பல தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பினர். ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி ஹிந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும். அப்படி இருக்கும் போது, வக்ப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை கையாளுகிறீர்கள். நன்கொடை மூலம் பெறப்படும் சொத்துக்களை பதிவு செய்வது என்பது மிகவும் கடினமானது. வக்பு சொத்தில் இருந்து வரும் வாடகை யாரிடம் செலுத்தப்படும்?பழமையான , தொன்மையான மசூதிகளுக்கு நிலப்பத்திரம் இருக்காது. தொன்மையான, தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மசூதிகளுக்கு புதிய வக்ப் சட்டத்தினால் பாதிப்பு ஏற்படுமா? வக்ப் சொத்துக்களை கோர்ட் முடிவு செய்ய ஏன் அனுமதிக்கக் கூடாது? இந்த விவகாரத்தில் கலெக்டர் முடிவு செய்வது நியாயமானதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், வக்ப் நிர்வாகக் குழுவில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம் செய்யும் முறை செல்லும். வக்ப் உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருக்க வேண்டும். வக்ப் விவகாரத்தில் 3 வழிமுறைகளே உள்ளன. மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் முடிவு செய்வது ஒரு வழிமுறை. மனுக்களை பொதுவான ஒரு ஐகோர்ட்டுக்கு அனுப்புவது மற்றொரு வழிமுறையாகும். அப்படியில்லையெனில், அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றுவது கடைசி வழிமுறையாகும், என தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட், வக்ப் நிர்வாகக் குழுவில் நீதிபதிகள் நியமனம், இஸ்லாமியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க வேண்டும் ஆகிய இடைக்கால உத்தரவுகளை, நாளை பிற்பகல் வரை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 69 )

Parthasarathy Badrinarayanan
ஏப் 23, 2025 11:05

இந்து அறநிலையத்துறை அரசின் ஒரு துறை. வக்ப் வாரியம் தனி. இது கூட சிந்திக்காமல் கேள்வி கேட்கிறது உச்ச நீதி மன்றம். 1995 வக்ப திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்பில் வழக்குகள் என்னாச்சு? உச்சநீதிமன்றம் பதில் சொல்லுமா?


Saleemabdulsathar
ஏப் 17, 2025 09:13

வக்பு சொத்து என்பது இஸ்லாமியர்களின் சொத்து இதை இஸ்லாமியர்கள் பார்த்து கொள்வார்கள் அரசு மூக்கை நுழைக்க கூடாது


பல்லவி
ஏப் 17, 2025 07:42

இஸ்லாமிய மக்களுக்கு உரிய சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மத்திய அரசு தலையிட அவசியமில்லை என்று தோணுது ஆனா இவர்கள் அவர்கள் சொந்த சொத்துக்களை எல்லாம் எடுத்து தாரை வார்க்க முற்படுவது ஏன் என்று புரியவில்லை


MUTHU
ஏப் 23, 2025 11:38

பொதுவாக மத்திய அரசு என்பது மாநிலங்களை இயக்குவது இல்லை. மாறாக மாநிலங்களால் இயக்கப்படுவது. அது ஒரு பொம்மலாட்ட பொம்மை போன்றது. மக்கள் பிரச்சினைகளின் தீர்வுகள் மக்களவையில் விவாதிக்கப்படுத்தல் வேண்டும். மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் மாநிலங்களால் மட்டுமே மத்திய அரசுக்கு எழுத்து பூர்வ முறையில் அனுப்பப்படும். இல்லாவிடில் மத்திய அரசுக்கு எந்த விஷயமும் தெரிந்தாலும் தெரியாது போல் தான் இருக்கும். கோர்ட்டுக்கு வெளியே ஆயிரம் கொலைகள் நீதிபதிகளுக்கு தெரிந்தும் நடக்கலாம். ஆனால் FIR சென்றால் மட்டுமே நீதிபதி விசாரிப்பார். அதை போன்றதே மக்களவை மற்றும் மத்திய அரசு. பின்பு மக்கள் அமைப்புகளின் கோரிக்கைகள் உதாரணமாய் சங்கங்கள் போன்றவை போன்றவையும் பெற்றுக்கொள்ளப்பட்டு பின்பு மக்களவை விவாதத்திற்கு கொண்டுவரப்படும். எந்த மாநிலத்திற்கும் தெரியாமல் அல்லது மாநிலங்களில் கேட்புக்கள் இல்லாமல் மசோதாக்கள் பாராளுமன்றத்திற்கு வருவதில்லை. மேற்படி சட்டமும் அத்தகையதே.


Ravikanth SP
ஏப் 17, 2025 01:59

அப்போது திமுகவும் விஜய்யும்???


பல்லவி
ஏப் 17, 2025 01:07

அப்படியே ஸ்வாகா செய்து வடக்கனுக்கு தாரைவார்க்கும் ப்ளான் இருக்கு போல


மதிவதனன்
ஏப் 17, 2025 00:30

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த சட்டத்தில் படி நிர்வாகக் குழுவில் உள்ள நபர்கள் இஸ்லாமியர்களாக அல்லாதவர்களும் இருக்கலாம் என கூறுகிறது இந்து மத கோவில்களை இவ்வாறு இந்துக்கள் அல்லாதவர் நிர்வகிப்பதை பற்றிய ஏதேனும் உதாரணத்தை கூற முடியுமா? திருப்பதி கோவில் நிர்வாகத்தை இந்துக்கள் அல்லாதோர் மேற்கொள்கின்றனரா?” எனக் கேள்வி எழுப்பிய போது, எந்த ஒரு உதாரணத்தையும் தான் தெரிவிக்க விரும்பவில்லை” என மத்திய அரசின் வழக்கறிஞர் மழுப்பலான பதில் அளித்தார். பதிவு செய்யப்படவில்லை என்றால் வக்பு என்ற அந்தஸ்து மட்டும்தான் பறிக்கப்படுமே தவிர, மற்றபடி அந்த சொத்தின் மீதான உரிமைகள் எதுவும் பறிக்கப்படாது” என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய போது, குறுக்கிட்ட நீதிபதிகள், பிறகு எதற்காக இந்த சட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள்?” என கேள்வி எழுப்பினார்கள்.


மதிவதனன்
ஏப் 17, 2025 00:29

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த சட்டத்தில் படி நிர்வாகக் குழுவில் உள்ள நபர்கள் இஸ்லாமியர்களாக அல்லாதவர்களும் இருக்கலாம் என கூறுகிறது இந்து மத கோவில்களை இவ்வாறு இந்துக்கள் அல்லாதவர் நிர்வகிப்பதை பற்றிய ஏதேனும் உதாரணத்தை கூற முடியுமா? திருப்பதி கோவில் நிர்வாகத்தை இந்துக்கள் அல்லாதோர் மேற்கொள்கின்றனரா?” எனக் கேள்வி எழுப்பிய போது, எந்த ஒரு உதாரணத்தையும் தான் தெரிவிக்க விரும்பவில்லை” என மத்திய அரசின் வழக்கறிஞர் மழுப்பலான பதில் அளித்தார். பதிவு செய்யப்படவில்லை என்றால் வக்பு என்ற அந்தஸ்து மட்டும்தான் பறிக்கப்படுமே தவிர, மற்றபடி அந்த சொத்தின் மீதான உரிமைகள் எதுவும் பறிக்கப்படாது” என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய போது, குறுக்கிட்ட நீதிபதிகள், பிறகு எதற்காக இந்த சட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள்?” என கேள்வி எழுப்பினார்கள்.


தாமரை மலர்கிறது
ஏப் 16, 2025 23:36

வக்ப் வாரியத்தில் நடக்கும் பயங்கரமான ஊழலை பற்றி பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அரசிடம் முறையிட்டார்கள். அவர்களின் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக, இஸ்லாமியர்களின் சொத்துக்களை நயவஞ்சகமாக அபகரிக்கும் செயல்களை தடுக்கும்விதமாக, இஸ்லாமியர்களை பாதுகாக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட சட்டம் தான் இது.


Sankar Ramu
ஏப் 16, 2025 22:29

சுப்ரீம் போர்ட் ஜனாதிபதியை கேள்வி கேட்க அதிகாரம் உண்டா?


மதிவதனன்
ஏப் 16, 2025 23:58

உண்டு அந்த ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது தலைமை நீதிபதி தான், ஆனாலும் DMKக்கு உள்ள ADVOCTE விங் எந்த கட்சிக்கும் இல்லை


RAJAA
ஏப் 17, 2025 04:20

கேள்வி கேட்க அதிகாரம் இல்லை..‌ஆனால் சட்ட நுணுக்கங்கள் குறித்த கருத்துகளை வழங்கலாம்


GMM
ஏப் 16, 2025 21:49

ஹிந்து சமய அறநிலையத்துறை அரசு துறை. சட்டப்படி ஹிந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும். அரசு மாற்ற முடியும். அனைத்து சாதி அர்ச்சகர். வக்ப் வாரியம் அரசு துறை நிர்வாகம் கீழ் வராது. நன்கொடை மூலம் பெறப்படும் சொத்துக்களுக்கு மூல பத்திரம் இருக்கும். அதனை முதலில் தாக்கல் செய்ய முடியும். வக்பு சொத்தில் இருந்து வரும் வாடகை செல்லும் இடம் காங்கிரஸ், திமுக, மம்தா அறிவர். பழமையான , தொன்மையான மசூதிகளுக்கு நிலப்பத்திரம் இருக்காது. சர்சுக்கும் இருக்காது . நவீன அறிவியல் மூலம் பழமையை கண்டுபிடிக்க முடியும். நில பதிவு, பராமரிப்பு நீதிமன்ற பணியில் வராது. ஒப்பிட்டு பார்க்க எந்த ஆவணமும் மன்றத்தில் இருக்காது. அனைத்தும் நிர்வாகத்திடம் பெற வேண்டும். வக்ஃபு சொத்து எது என்று அரசு தான் தீர்மானிக்க வேண்டும். தேவைக்கு அதிக நிர்வாக அமைப்புகள் இருக்கும் போது, வக்ப் சொத்துக்களை கோர்ட் முடிவு செய்ய ஏன் அனுமதி கேட்கிறது. இந்த விவகாரத்தில் கலெக்டர் முடிவு செய்வது நியாயமானதா? அநியாயமா? என்பதை வாதிட மன்றம் உள்ளது. கலெக்டர் நிர்வாக நீதிபதி. அவர் நியாயமான முடிவை ஏற்க வேண்டும்.


S Ramkumar
ஏப் 21, 2025 15:04

இந்து அறநிலைத்துறையில் பல கிருத்துவர்கள் இந்து பெயரில் இருக்கின்றனர். பலமுறை இவர்களிடம் டேக்ளரேஷன் கேட்டும் இன்னமும் பலர் தரவில்லை.


புதிய வீடியோ