உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் 7 அதிகாரி வீடுகளில் கட்டுக்கட்டாக பணம், நகை பறிமுதல்

கர்நாடகாவில் 7 அதிகாரி வீடுகளில் கட்டுக்கட்டாக பணம், நகை பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு:கர்நாடக லோக் ஆயுக்தா அதிகாரிகள், நேற்று அதிகாலையே ஏழு அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான, 40 இடங்களில் சோதனை நடத்தினர். அனைவரின் வீடுகளிலும் கட்டுக்கட்டாக ரொக்கம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கின. கர்நாடகாவில், சொத்து குவிப்பு புகார்களில் சிக்கும் அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.தட்சிண கன்னடா மாவட்டத்தின் சர்வே மேற்பார்வையாளர் மஞ்சுநாத், விஜயபுராவின் அம்பேத்கர் மேம்பாட்டு கார்ப்பரேஷன் அதிகாரி ரேணுகா சாதர்லே உள்ளிட்ட ஏழு அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, 40 இடங்களில் நேற்று அதிகாலையே லோக் ஆயுக்தா போலீசார் சோதனையில் இறங்கினர்.கலபுரகியின், அக்கமகாதேவி லே - அவுட்டில் உள்ள தாசில்தார் உமாகாந்தின் வீடு, அலுவலகம், பண்ணை வீடு உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில், கட்டுக்கட்டாக ரொக்கம், சொத்து ஆவணங்கள் சிக்கின. மேலும் பல அதிகாரிகள் வீடுகளில் தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், சொகுசு கார்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் சிக்கின.'மேலோட்டமாக பார்க்கும் போது, அதிகாரிகள் சட்டவிரோதமாக சொத்துகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது, ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே தெரியும்' என, லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிந்தனை
மே 16, 2025 09:56

கல்வி கற்றவர்கள் தவறு செய்தால் கல்வித் துறையில் உள்ளவர்களுக்கும் கட்டாய கல்வியை வலியுறுத்திய நீதிபதிகளுக்கும் கட்டாயம் தண்டனை தர வேண்டும் - என்று சட்டம் வந்தால் தான்... கல்வி கற்றவர்கள் ஒழுக்கமாக வாழ முடியும் நாட்டில். இது பற்றி சிந்திக்க வேண்டிய காலம் வந்துள்ளது... திருடர்களை உருவாக்க கல்வி தேவையா? அதற்கு கட்டாய கல்வி முறையும் தேவையா... என் பிள்ளையை இந்த கல்வியில் பயில வைக்காமல் வாழ வைக்க எனக்கு உரிமையில்லையா... அப்படி ஒரு பள்ளிக்கூடத்தை நடத்த எனக்கு உரிமை இல்லையா.... ஏன் இல்லை... என்பதை நீதித்துறை விளக்க வேண்டும்...


பண்பாட்டுக் கல்வி
மே 16, 2025 09:53

வெள்ளையனின் கல்வி கொடுத்த நல்ல்ல்ல்லா படித்தவர்களின் லட்சனம்... வாழ்க...


R.RAMACHANDRAN
மே 16, 2025 07:46

கர்நாடக லோக் ஆயுக்தா போல அனைத்து மாநில ஆயுக்தாக்களும் செயல்படாததால் லஞ்ச ஊழல் வேரூன்றிவிட்டது.மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஊழல் மிக்க அதிகார வர்கத்தை காப்பாற்று வதிலேயே குறியாக உள்ளதால் மத்திய அரசு அதிகார வர்க்கமும் ஊழலில் திளைக்கிறது.


நிக்கோல்தாம்சன்
மே 16, 2025 07:11

pala அதிகாரிகள் இப்போ பண்ணை வீடு , அதில் நீச்சல் குளம் என்று தான் அலைகிறார்கள்


Kasimani Baskaran
மே 16, 2025 03:51

பசையுள்ள பதவிகளுக்கு ஆள் எடுக்கும் பொழுது நேர்மையாக இருந்தால் பல சிக்கல்களை தவிர்க்க முடியும். மாறாக ஏலம் மூலம் பதவியை விற்றால் அவர்கள் போட்டதை விட பல்லாயிரம் மடங்கு பணம் எடுக்கவே முயல்வார்கள்.


D.Ambujavalli
மே 16, 2025 03:15

இந்த லஞ்சம், வருமானத்தைப்போல் பல மடங்கு சொத்து வழக்குகளில் எல்லா மாநிலங்களும், அதிகாரிகள், அரசியல்வாதிகளும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னிலையில் நிற்கின்றனர் இவர்களெல்லாம் நாட்டை சுத்தமாக விழுங்கிவிட்டாலும் வியப்பில்லை


சிட்டுக்குருவி
மே 16, 2025 00:56

அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.அவர்களுக்கு தெரியாது என்றால் அவர்கள் ஆள தகுதி இல்லாதவர்கள் என்று அர்த்தம்.தமிழ் நாட்டிலும் லோக் ஆயுக்தா அமைப்பு இருக்கின்றது ஆனால் யாருக்கும் தெரியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை