உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறைகளில் ஜாதி பாகுபாடு தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சிறைகளில் ஜாதி பாகுபாடு தமிழக அரசுக்கு நோட்டீஸ்

புதுடில்லி: சிறைகளில் உள்ள கைதிகளிடம் ஜாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதை எதிர்க்கும் வழக்கில் தமிழகம், உத்தர பிரதேசம் உட்பட, 11 மாநிலங்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் கல்யானைச் சேர்ந்த சுகன்யா சாந்தா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு: சில குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள சிறை கையேடுகள், ஜாதி பாகுபாடு காட்டும் வகையில் உள்ளன. குறிப்பாக பழங்குடியினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது.சிறைகளில் வேலை ஒதுக்குவதிலும், சிறை அறைகளில் அடைக்கப்படுவதிலும் இந்தப் பாகுபாடு உள்ளது. இந்த பாகுபாடுகளை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, ஜார்க்கண்ட், கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் இந்த பாகுபாடு உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து பதிலளிக்கும்படி, இந்த 11 மாநிலங்கள், மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்டவற்றுக்கு அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Suppan
ஜன 04, 2024 16:47

அந்த செந்தில்பாலாஜிக்கு எப்படிங்க? அவருக்கு அரச (அமைச்சர்) மரியாதை கொடுப்பதாகப் புகார் எழுந்துள்ளதே


ஆரூர் ரங்
ஜன 04, 2024 15:22

தென் மாவட்ட சிறைகளில் பெரிய ஜாதிக் குழுக்களுக்கு தனித்தனி பிளாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தி. இது கைதிகளுக்கிடையே மோதல் வராமல் தடுக்கவா???? அல்லது படிநிலை மேட்டரா?


raja
ஜன 04, 2024 06:28

எங்கேடா அந்த திருட்டு திராவிட ஈரோட்டு வெங்காயமும் அவனின் கால் கழுவும் திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளையன் விடியாமூஞ்சியும்....


Ramesh Sargam
ஜன 04, 2024 06:10

சிறைக்கு குற்றவாளிகளை அனுப்புவதே அங்கே அவர்கள் திருந்த வேண்டும் என்கிற ஒரு எண்ணத்தில்தான். ஆனால், அங்குள்ள அதிகாரிகளே இப்படி நடந்துகொண்டால், அவர்கள் எப்படி சிறைக்குள் வரும் கைதிகளை திருத்தமுடியும்?


வெகுளி
ஜன 04, 2024 05:30

பழங்குடியினரை பிரித்து பார்ப்பது மனிதத்தன்மையன்று...


வெகுளி
ஜன 04, 2024 05:29

அவங்களுக்கு பிளாஸ்டிக் சேராவது குடுக்க சொல்லி திருமா வலியுறுத்தணும்...


Kasimani Baskaran
ஜன 04, 2024 05:04

ராம்சாமியை சிறைக்கு அனுப்பியிருந்தால் அங்கும் கூட ஜாதியை ஒழித்திருப்பார் - உபிஸ்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 04, 2024 12:19

எனக்கென்னவோ டவுட்டா கீது.


DVRR
ஜன 04, 2024 17:45

சிறையில் இருப்பவன் குற்றவாளி இல்லை. சிறையில் இருப்பவன் குற்றவாளி இல்லவே இல்லை. சிறையில் இருப்பவன் ஒரு அப்பாவி. என்று சொரியான் எல்லா சிறைகளிலும் எழுதி வைத்திருப்பார் அவரை சிறைக்கு அனுப்பியிருந்தால்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ