உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஜய் கட்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்; கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு!

விஜய் கட்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்; கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாளை (அக்.,27) விக்கிரவாண்டியில் நடக்கும் விஜய் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v0n543y9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சினிமாவுக்கு செட் அமைக்கும் கலைஞர்களின் உதவியுடன் விக்கிரவாண்டி வி. சாலையில் மேடை, பந்தல் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. கட்சி தொடங்கியுள்ள விஜய், தம் கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் நாளை உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.பஞ்ச் டயலாக் எதிர்பார்க்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலும், தற்போது உள்ள அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை எதிர்பார்க்கும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் அவரது பேச்சு இருக்கும் என்கின்றனர், ரசிகர் மன்றத்தினர். இந்த மாநாட்டில், விஜய்க்கு நெருக்கமான திரையுலக கலைஞர்கள் பங்கேற்பர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத பிரபலங்கள் சிலரை கட்சியில் இணைக்க விஜய் முயற்சி எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தாமாக முன்வந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு சகாயம் தரப்பிலிருந்து எந்த விதமான மறுப்பும் வெளியாகவில்லை. அதேபோல, ஏற்கனவே இருக்கும் அரசியல் கட்சிகளில் ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்து இப்போது வெறுப்பில் இருக்கும் பழைய பிரபலங்களான வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகின்றன. நடிகர் கமல் கட்சி தொடங்கிய நிகழ்ச்சியில், பல்வேறு பொது அமைப்பினர், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று, செல்வாக்குள்ள தனிநபர்களை மாநாட்டில் மேடையேற்றி அசத்த வேண்டும் என்பது நடிகர் விஜயின் திட்டமாக இருக்கிறது. அதை ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைபவர்கள் யார் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் தான் முழு விவரம் தெரியவரும் என்று கூறுகின்றனர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

N Annamalai
அக் 27, 2024 15:05

எல்லோர் அடிவயிற்றில் பயம் வந்துள்ளது மட்டும் காணமுடிகின்றது


brittopharma
அக் 26, 2024 18:19

இப்போது இருக்கும் மரியாதைக்குரிய வாழ்க்கையை கடைபிடித்தால் நன்று


Oru Indiyan
அக் 26, 2024 16:40

த வெ க .. ஒரு கிறிஸ்தவ கட்சி. நாளை தெரியும். சிறுபான்மை கட்சி. இதை வைத்து பேரம் பேசி போகிறார் ஜோசப் விஜய்.


ஆரூர் ரங்
அக் 26, 2024 16:32

எல்லாத் தேர்தல்களிலும் நிற்பாரே அந்த பத்மராஜன்?


Rajarajan
அக் 26, 2024 15:53

நல்லா புரிஞ்சிக்கோங்க. அந்த ஆண்டவனே இறங்கிவந்து இந்தியாவில் கட்சி ஆரம்பிச்சாலும், நாட்டின் / தமிழகத்தின் ஒட்டுமொத்த செலவை சுமார் ஐம்பது சதவிகிதம் குறைக்காமல், அடுத்த தலைமுறை வளர்ச்சி மாற்றம் ஒன்றுமே செய்யமுடியாது. இதற்கு ஒரே வழி, நஷ்டத்தில் இயங்கும் / தேவையற்ற அரசு நிறுவனங்களை மூடினாலே ஒழிய, வேறு வழியே இல்லை. இல்லையேல் அரைத்த மாவு தான். அதற்கு பதிலாக, இருக்கும் பருத்தி மூட்டைகளே இருந்துவிட்டு போகலாம். புது மூட்டைகள் தேவையே இல்லை. இதில் ஐஸ்வர்யா சேர்ந்தால் என்ன, சுஷ்மிதா சேர்ந்தால் என்ன, மெக்காவில் கொக்கு ........... என்ன மதிப்போ, அதே மதிப்பு தான் இவர்களுக்கும்.


karthik
அக் 26, 2024 14:34

சகாயம், உமாசங்கர்,மோகன் சி லாசரஸ் ,ம்ம் அடுத்து..


ஆரூர் ரங்
அக் 26, 2024 16:31

ஜார்ஜ் பொன்னையா


வைகுண்டேஸ்வரன்
அக் 26, 2024 14:17

சங்கவி, த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, சிம்ரன் - இவர்களில் 2 பேராவது வந்தால் நல்லாருக்கும். பிஜேபி யின் அழுத்தத்தால் வேறு வழியில்லாமல் கட்சி ஆரம்பித்து விட்டார். விஜய் யை முதல்வர் ஆக்குவதற்காக திருமா, சீமான், அன்புமணி, EPS, போன்றவர்கள் இவரோட சேர்ந்து உழைக்கப் போவதில்லை. இவர்களில் ஒருவரை முதல்வர் ஆக்குவதற்காக விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை. எனவே திமுக இதைப் பற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை.


Rengaraj
அக் 26, 2024 14:02

இவரது சித்தாந்தம் என்ன என்று கட்சி ஆரம்பித்து ஏழு எட்டு மாதங்கள் ஆகிறது. ஆனால் எதுவும் வெளியில் சொல்லவில்லை. அவியல் சித்தாந்தம் கொண்ட மற்றுமொரு கட்சி என்று தான் தெரிகிறது. பெரியாரை விட மனமில்லை. திராவிடம் தேவை. அம்பேத்கரை கையில் எடுத்துகொண்டாயிற்று. பட்டியல் இனத்தவருக்கு ஆதரவு என்ற ஒரு கோணம். மத்திய ஆளும் அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்கவேண்டும் என்று முன்னாலேயே முடிவு கட்டிவிட்டார். நீட் பற்றி அதை எதிர்த்து பேசினார். இதெல்லாம் இங்குஇருப்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களே. இவர் என்ன புதிதாக செய்யப்போகிறார். ரசிகர்களெல்லாம் இவருக்கு வோட்டுப்போட்டுவிடுவார்கள் . மற்ற வாக்காளர்களுக்கு என்ன செய்யப்போகிறார். ? சினிமா பாணியில் தனது வருகைக்கு ஓர் பில்ட்டப் கொடுக்கிறார். ரசிக்கலாம். ஆனால் ஆட்சியதிகாரத்தை மக்கள் கொடுத்துவிடுவார்களா ? யார் இவருக்கு ஐடியா தந்தார்கள் என்று தெரியவில்லை. சினிமா மாதிரி பில்ட்டப் தீம் மியூசிக் எல்லாம் இங்கே எடுபட வேண்டும் முன்களத்தில் முன்காலத்தில் நின்று போராடவேண்டும். அவர் களத்துக்கு இதுநாள் வரை வரவில்லை. சீமானே கத்தி கத்தி பார்த்து தனியாக போறாடுகிறார். அவருக்கே மக்கள் எம்.எல்.ஏ என்ற அங்கீகாரத்தை கொடுக்கவில்லை.


HoneyBee
அக் 26, 2024 13:15

பாவம். இலவு காத்த கிளி.


Ms Mahadevan Mahadevan
அக் 26, 2024 12:59

மற்ற கட்சிகளியே காப்பி அடைகிறார் விஜய். எனவேதான் அவர் மீது சந்தேகம் வருகிறது. ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று. இவர் எப்படி நல்லாட்சி தர முடியும்,? மாநாட்டு செலவு தொகை எப்படி வந்தது என்று உண்மையாக அறிவித்தல் நம்பலாம்.


முக்கிய வீடியோ