உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; அரசாணையை கெஜட்டில் வெளியிட்டது மத்திய அரசு

2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; அரசாணையை கெஜட்டில் வெளியிட்டது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்பதற்கான அரசாணை, இன்று மத்திய அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக, 2021ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக கடந்த 2019ம் ஆண்டில் 8,754 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 3,941 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.இந்த சூழ்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும், 2027 மார்ச் 1ல் துவங்கும் என கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, வரும் 16ம் தேதி வெளியிடப்படும். எனினும், பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக 2026, அக்டோபர் 1ம் தேதியே கணக்கெடுப்பு பணி துவங்கும். நாட்டின் மற்ற மாநிலங்களில் இந்த வேலைகள் 2027, மார்ச் 1ல் துவங்கும், என அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்பதற்கான அரசாணை, இன்று மத்திய அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது. இது குறித்து நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். முதல்முறையாக, இந்த கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 34 லட்சம் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் பேர், அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி இந்த பணியை மேற்கொள்வார்கள், எனக் குறிப்பிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழ்வேள்
ஜூன் 16, 2025 20:44

குடிமக்கள் கூறும் அவர்களின் சாதி மதம் விபரங்களை ஆதார் எண் உடன் இணைக்க வேண்டும்...சாதி என்ற ஒன்று இருந்தால் அவன்/ அவள் ஹிந்து மட்டுமே....சாதியோடு முன்னொட்டாக ஆப்ரஹாமிய மதத்தை சொன்னால் அந்த நபர் சிறுபான்மை மதம் என்பதை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும்... ஹிந்து அல்ல என்றும் பதிவு செய்ய வேண்டும்...கிரிப்டோ திருடர்களை கண்டறிந்து கட்டுப்பாடு செய்ய இதுவே வழி..


Narayanan Muthu
ஜூன் 16, 2025 19:39

மக்கள் தொகை கணக்கெடுப்பு சரி. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எதுவும் தகவல் உண்டா


Sundar R
ஜூன் 16, 2025 19:01

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும் போது, குடும்பத்தலைவர்/குடும்பத்தலைவி ஆகியோரிடம் அவர்கள் சொந்தமாக வீடு எத்தனை வீடுகள், கார்கள், இதர சொத்துக்களின் மதிப்பு, எத்தனையாவது தலைமுறையாக இவர் இட ஒதுக்கீடு மூலம் பலனடைந்திருக்கிறார்? போன்ற விபரங்களையும் கேட்டு பதிவு செய்ய வேண்டும். தற்போதைய இட ஒதுக்கீடு முறை மூலம் கோடீஸ்வரர்கள் ஏராளமான ஏழைகளை எளிதில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல தலைமுறைகளாக இட ஒதுக்கீட்டுப் பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், முதல் முறையாக இட ஒதுக்கீடு மூலம் முயற்சி செய்கிறவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஏராளமான ஏழை மக்களை ஏமாற்றுவதற்கு வழிவகை செய்கிறது. அனைத்து சமுதாயத்திலும் ஏராளமான ஏழை ஜனங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்த பின்பு தற்போதைய இட ஒதுக்கீட்டு முறையையே மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அடித்தட்டில் இருப்பவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற அம்பேத்கர் அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாது போகும். அம்பேத்கர் அவர்கள் தற்போது உயிருடன் இருந்து மேற்கூறிய தவறுகள் இருப்பதைக் கண்டால், இட ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிக்கு கடுங்கண்டனம் தெரிவிப்பார். தற்போதைய இட ஒதுக்கீட்டு முறை அம்பேத்கர் அவர்களே கண்டிக்கும் வகையில் படுமோசமாக அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த‌ ஏழை மக்களை ஏமாற்றுகிறது.


ஆரூர் ரங்
ஜூன் 16, 2025 13:52

முன்பெல்லாம் முழுமையான தரவுகள் வெளியாக 3 ஆண்டுகள் கூட ஆகும். இப்போ டிஜிட்டல் கணக்கெடுப்பு என்பதால் அடுத்தாண்டு நவம்பருக்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் தொகுதி மறுவரையறை ஆலோசனை தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றாலும் சுப்ரீம் கோர்ட்டில்தான் முடிவாகும். அதற்கே நீண்டகாலமாகும்.


சமீபத்திய செய்தி