UPDATED : ஆக 23, 2024 11:24 PM | ADDED : ஆக 23, 2024 11:05 PM
புதுடில்லி: 156 வகையான எப்.டி.சி., வகை மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எப்.டி.சி., என்பது, சில மூலப் பொருட்களின் கலவையாகும்.அதாவது, சில மூலப் பொருட்கள் இணைந்து தயாரிக்கப்படும் மருந்தாகும். இந்த மருந்துகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு தடை விதித்து கடந்தாண்டு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் இன்று (ஆக.,23) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், காய்ச்சல், ஜலதோசம், அலர்ஜி மற்றும் வலி நிவாரணி மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு மருந்துகள் குறித்து டி.டி.ஏ.பி. எனப்படும் மருந்து தொழில்நுட்ப வாரியம் நிபுணர் குழுவினர் நடத்திய ஆய்வில் இவை உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என 156 வகையான மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.