உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் திருத்த மசோதா தாக்கல்: லோக்சபாவில் நிறைவேறியது

வக்ப் திருத்த மசோதா தாக்கல்: லோக்சபாவில் நிறைவேறியது

வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பின் நிறைவேறியது.வக்ப் சொத்துகளை அரசு கையகப்படுத்தும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டை, அரசு மறுத்தது. ''உண்மையான வக்ப் சொத்துகளை பறிக்க மாட்டோம். பிறர் சொத்துகளை வக்ப் வாரியம் பறிக்கவும் விட மாட்டோம்,'' என, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zyrkb0aj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மசோதாவை தாக்கல் செய்து, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:வக்ப் சட்டத்திருத்தத்துக்காக, இரு சபைகளின் உறுப்பினர்களை கொண்ட கூட்டுக்குழுவின் ஆலோசனை கூட்டம், இதற்கு முன் ஒரு முறை கூட நடந்ததில்லை. ஆனால் தற்போது, கூட்டுக்குழுவின் விரிவான விசாரணை மட்டுமின்றி, 25 மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் என, பல்வேறு தரப்பினரின் ஆலோசனை கேட்டு, இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. நேரிலும், ஆன்லைன் வாயிலாகவும், 97,27,772 மனுக்கள் பெறப்பட்டன. சட்ட வல்லுநர்கள், மத குருமார்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசிக்கப்பட்டது. பரிந்துரைகள், கோரிக்கைகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என, இதுவரை பார்லி., வரலாற்றில் இல்லாத வகையில், பல சுற்று ஆலோசனைகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதன் இறுதி வடிவமே இந்த மசோதா.உலகிலேயே வக்ப் சொத்துகள் அதிகமுள்ள நாடு இந்தியா. அப்படியிருந்தும், அந்த சொத்துகளால், ஏழை முஸ்லிம்களுக்கு எந்த பயனுமில்லை. 4.9 லட்சமாக இருந்த வக்ப் சொத்துகளின் எண்ணிக்கை தற்போது 8.72 லட்சமாக உயர்ந்து விட்டது. இந்த சொத்துகள் சரிவர நிர்வகிக்கப்பட்டால், முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரம் பல மடங்கு மேம்படும்.வக்ப் வாரியத்தின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. பார்லிமென்ட், சி.ஜி.ஓ., காம்ப்ளக்ஸ் உட்பட, டில்லியில் உள்ள முக்கிய சொத்துகள் அனைத்தும், தங்களுக்கு சொந்தம் என வக்ப் வாரியம் கூறுகிறது. இது குறித்து, 1970ம் ஆண்டிலிருந்தே வழக்குகளும் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், 2013ல் ஐ.மு., கூட்டணி அரசு, வக்ப் சட்டத்தில் சில திருத்தங்களை செய்தது. அதன்படி, டில்லியில் உள்ள முக்கியமான, 123 கட்டடங்கள் மீதான உரிமையை, அரசு விலக்கிக் கொண்டது. அவை வக்ப் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அடுத்த ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பா.ஜ., கைப்பற்றாமல் இருந்திருந்தால், பார்லிமென்ட் கட்டடத்தை கூட, வக்ப் வாரியத்திடம் காங்கிரஸ் ஒப்படைத்துஇருக்கும். எதிர்க்கட்சிகள் கூறுவதை போல, வக்ப் சொத்துகளை அபகரிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. மதம் சார்ந்த உணர்வுகளிலோ, மத நிறுவனங்கள் மீதோ, மோடி அரசு எந்த வகையிலும் தலையிடாது. அரசு செய்ய இருப்பது வக்ப் சொத்து நிர்வாகத்தை சீரமைக்கும் முயற்சி மட்டுமே.இதற்கு முன், சன்னி வக்ப் வாரியத்தில் சன்னி முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும். ஷியா வாரியத்தில் ஷியா முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும். அவை எல்லாம், இந்த மசோதாவில் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாகவும், முழுக்க முழுக்க மதச்சார்பின்மையுடன் கூடிய அமைப்பாகவும், வக்ப் வாரியம் இனி இருக்கப் போகிறது.புதிய சட்டத்தின்படி, சன்னி, ஷியா, போரா, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பெண்கள், முஸ்லிம் அல்லாத முக்கியஸ்தர்கள் என பலரும், வக்ப் வாரியத்தில் இடம் பெறுவர். வாரியத்தின் குழுவில், குறைந்தபட்சம் முஸ்லிம் அல்லாத நான்கு பேர், இரண்டு பெண்கள் கட்டாயம் இடம் பெறுவர். நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப் போவதால், தரவுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் பதிவு செய்யப்படும். இணையதளம் வாயிலாக அனைத்து தரவுகளும் கையாளப்படும். இதனால் ரகசியமாகவோ, திருட்டுத்தனமாகவோ, இஷ்டம் போல வக்ப் சொத்துகளை யாரும் நிர்வகிக்க முடியாது. முறையான தணிக்கை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.சொத்துகளை மேற்பார்வையிட்டு, அவற்றை நிர்வகிக்கும் பணியை மட்டுமே வக்ப் வாரியம் செய்யும். முன்பு இருந்த சட்டத்தின்படி, யாருக்கு சொந்தமான எந்த சொத்தாக இருந்தாலும் அதை தன் சொத்தாக வக்ப் வாரியம் அறிவிக்க முடியும். இதனால் நாடு முழுதும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முஸ்லிம்கள் அதிகம். அந்த அநீதிக்கு இந்த மசோதா வாயிலாக முடிவு கட்டப்படுகிறது.இவ்வாறு ரிஜிஜு பேசினார்.

சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூற எவருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா:வக்ப் என்பது, முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த சொத்துக்களை, மதம் தொடர்பான நல்ல பயன்பாட்டுக்கு தானமாக வழங்குவது. ஆனால், மற்றவர்கள் சொத்துக்களை பறித்துக் கொள்வது வக்ப் சொத்தாக முடியாது. பல மாநிலங்களில், கோவில் நிலங்கள், கிராமங்கள் என, அனைத்தையும் வக்ப் சொத்தாக மாற்றியுள்ளனர். அரசு நிலங்களை வக்ப் சொத்தாக அபகரித்துள்ளனர். அரசு நிலங்கள், கிராமங்களில் பொதுப் பயன்பாட்டுக்கான நிலங்கள் அனைவருக்குமானது. அதற்கு வக்ப் வாரியங்கள் உரிமை கோர முடியாது. அதை மோடி அரசு அனுமதிக்காது.வக்ப் என்பது ஏழை முஸ்லிம்களின் நலனுக்கானது. திருடுவதற்காக அல்ல. இந்த மசோதா அந்த திருட்டை நிறுத்தும். இது மசோதா சொத்துக்களை பாதுகாக்கும். தொல்லியல் துறை சொத்துக்கள், பழங்குடியினர் நிலம், தனியார் நிலம் போல, வக்ப் சொத்துக்களை பாதுகாப்பதே இந்த மசோதாவின் நோக்கம். தனிநபர்கள், தங்களுக்கு சொந்தமான நிலத்தை மட்டுமே வக்புக்கு நன்கொடையாக வழங்க முடியும். மற்றவர்கள் நிலத்தையோ, அரசு நிலத்தையோ, வக்ப் சொத்தாக அறிவிக்க முடியாது.இந்த மசோதா குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன. ஆனால் இந்த அரசு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லுமே தவிர, ஓட்டு வங்கி அரசியல் செய்ய மாட்டோம். வக்ப் வாரியம் என்பது மத அமைப்பு அல்ல, அது ஒரு நிர்வாக அமைப்பு. அதில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காகவே இந்த திருத்தம் செய்யப்படுகிறது. மசோதா முன்தேதியிட்டு அமல்படுத்தப்படாது.வக்பு சொத்துக்கள் தொடர்பான பதிவுகளுக்கு, கலெக்டர்களே பொறுப்பாளராக இருப்பர் என்பதில் என்ன தவறு உள்ளது. எது அரசு நிலம், எது தனியார் நிலம் என்பதை நிர்வகிப்பது கலெக்டர்களே. வழிபாட்டு தலங்கள் கட்டலாம். ஆனால், அரசு நிலத்தில் எப்படி கட்ட முடியும். அதனால், கலெக்டர்களே பொறுப்பாளர்களாக இருப்பர்.இந்த மசோதா, பல தரப்பினருடன் ஆலோசிக்கப்பட்டு, பலருடைய கருத்துக்கள் கேட்கப்பட்டு, நீண்ட விவாதங்களுக்குப் பிறகே தயாரிக்கப்பட்டுள்ளது. யாருடைய உருட்டல், மிரட்டல்களுக்கு பயந்தோ, அவர்களுடைய ஆதரவு தேவை என்றோ, ஓட்டு வங்கிக்காகவோ இந்த மசோதா தயாரிக்கப்படவில்லை.நீங்கள் மக்களை ஓட்டுகளாக பார்க்கிறீர்கள். நாங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பார்க்கிறோம். இந்த மசோதா சட்டமானால், அதை சிறுபான்மையினர் ஏற்க மாட்டார்கள் என ஒரு எம்.பி., கூறினார். எந்த சட்டமாக இருந்தாலும், அது அனைத்து மக்களையும் கட்டுப்படுத்தும். பார்லிமென்டால் நிறைவேற்றப்படும் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று எவரும் கூற முடியாது.இவ்வாறு அமித் ஷா் பேசினார்.

மசோதாவை தயாரித்தது யார்? அதிரடி கேள்வி கிளப்பிய காங்.,

எதிர்க்கட்சி துணை தலைவரான காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் பேசியதாவது:இந்த மசோதா, நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது. மதம் சார்ந்த விஷயங்களில், அரசு தலையிடுவதை இது உறுதி செய்கிறது. இந்த மசோதாவை, சிறுபான்மையினர் நலத்துறை தான் தயாரித்ததா அல்லது வேறு ஏதாவது துறை தயாரித்து அளித்ததா? எங்கிருந்து இந்த மசோதா வருகிறது? வேறு எந்த மதத்தை சேர்ந்தவர்களிடமாவது, நீங்கள் ஐந்து ஆண்டுக்கு முன் இதே மதத்தில் இருந்தீர்களா என, உங்களால் கேட்க முடியுமா? பின் எதற்காக, இந்த மசோதாவில் மட்டும் அவ்வாறு கேட்கப்படுகிறது? மத விஷயங்களில், இந்த அரசு தலையிட வேண்டிய அவசியம் என்ன? அரசியலமைப்பு சட்டத்தை, இந்த மசோதா வாயிலாக அரசு நீர்த்துப் போகச் செய்திருக்கிறது. இரண்டாவதாக, சிறுபான்மை சமூகத்தை அவமதிப்பு செய்துள்ளது. மூன்றாவதாக, இந்திய சமூகத்தை பிளவுபடுத்தியுள்ளது. ஐ.மு., கூட்டணி அரசின் மீது, அமைச்சர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் தவறானவை. குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அவர் அளிக்க வேண்டும். உ.பி.,யில் ஆளும் பா.ஜ., அரசு, சாலைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த கூட அனுமதி தரவில்லை. இந்த மனநிலையில் இருக்கும் நீங்கள், முஸ்லிம்கள் மீது இரக்கப்படுவதாக கூறுவதை எப்படி நம்புவது? பா.ஜ.,வில் சிறுபான்மை சமூகங்களிலிருந்து எத்தனை பேர் எம்.பி.,க்களாக இருக்கின்றனர்? வக்ப் மசோதா வாயிலாக, ஒரு சமூகத்தின் மீது இந்த அரசு குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதே நிலைமை, நாளைக்கு வேறு ஒரு சமூகத்திற்கும் நடக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு கோகாய் பேசினார்.

தமிழக கிராமம் பற்றி சொன்னது கட்டுக்கதை என்கிறார் ராஜா

தி.மு.க.,வின் ராஜா:தமிழகத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பை கொண்ட ஒரு கிராமத்தையே, வக்ப் வாரியம் ஆக்கிரமித்துள்ளதாக அமைச்சர் ரிஜிஜூ கூறினார். விசாரணையின் முடிவில், அமைச்சர் கூறியது, பொய்யான கதை என்பது நிரூபணம் ஆனது. வக்ப் வாரியத்தில், எதற்காக முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக்க வேண்டும். இந்த மசோதாவை அறிமுகப்படுத்தவும் தாக்கல் செய்யவும் முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு எம்.பி.,யைக் கூட, உங்கள் கட்சியில் உருவாக்க முடியாத நீங்களா, அந்த மக்களை காப்பாற்றப் போகிறீர்கள். சொத்து என்பது வேறு. அதை நிர்வகிப்பது என்பது வேறு என்கிறார் அமைச்சர். தயவு செய்து எங்களுக்கு பாடம் எடுக்காதீர்கள். உண்மை எது தெரியுமா, அரசியல் என்பது வேறு. மதம் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக கலக்க கூடாது.சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ்:இந்த அரசு தனது தோல்விகளை மறைப்பதற்காக ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வகையிலான சட்டங்களைக் கொண்டு வருகிறது. உலகளவில் நம் நாட்டுக்கு உள்ள மதச்சார்பின்மை பிம்பத்தை உடைப்பதாக இந்த மசோதா உள்ளது. காங்.,கின் வேணுகோபால்:நாட்டின் மதச் சுதந்திரம் மற்றும் மத நநம்பிக்கைக்கு எதிரான தாக்குதலில் பா.ஜ., அரசு தீவிரமாக உள்ளது என்பதையே இந்த மசோதா காட்டுகிறது. சிறுபான்மையினரை குறி வைக்கும், ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

நிறைவேறியது மசோதா

லோக்சபாவில், 12 மணி நேர விவாதத்துக்கு பின், வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான ஓட்டெடுப்பு, நள்ளிரவு 1:00 மணி அளவில் நடந்தது. அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கொண்டு வந்த திருத்தங்கள் மீதும் தனித்தனியாக ஓட்டெடுப்பு நடந்தது. அனைத்து திருத்தங்களும் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக தோற்கடிக்கப்பட்டன.இறுதியில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.,க்கள் ஓட்டளித்த நிலையில் 232 பேர் எதிர்த்து ஓட்டளித்தனர். நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

பாரதி
ஏப் 03, 2025 14:59

மதசார்பின்மை என்பதற்கு பொருள் என்ன இந்த நாட்டை உருவாக்கிய பூர்வ குடிமக்களும் இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்களும் சரி சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே வெளிப்படையாக இதற்கு மறைமுக பொருளும் உண்டு. கொள்ளையடிக்க வந்தவர்கள் தொடர்ந்து கொள்ளையடித்துக் கொண்டே இருக்க வேண்டும் இந்த நாட்டின் குடிமக்கள் நல்லவர்களாக அதாவது எளிச்ச பெயர்களாக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும்


Bahurudeen Ali Ahamed
ஏப் 05, 2025 13:58

ஆஹா என்ன ஒரு புரிதல் , இங்குள்ள இஸ்லாமியர்கள் துருக்கியிலிருந்தோ அல்லது சவுதியிலிருந்தோ வந்தவர்கள் இல்லை இந்திய நிலப்பரப்பில் ஒருகாலத்தில் பவுத்தனாகவோ அல்லது வைணவனாகவோ அல்லது சைவனாகவோ இருந்த மக்கள்தான் இஸ்லாமை தேர்ந்தெடுத்து கொண்டு இந்திய இஸ்லாமியனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் பூர்வகுடிகள் யாரென்று எங்களுக்கு பாடம் எடுக்கவேண்டாம், பர்மா இலங்கை சீனா இங்கெல்லாம் வசிக்கும் மக்கள் இந்தியாவில் தோன்றிய பவுத்த சமயத்தை கடைபிடிக்கிறார்கள் அதற்காக அவர்களை இந்தியர்கள் என்று அழைக்க முடியுமா?


சிந்தனை
ஏப் 03, 2025 14:57

அமித் ஷா அவர்களின் விளக்கம் மிக அற்புதமானது இவ்வளவு நல்ல மசோதாவை எதிர்த்துப் பேசுபவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்றால் இந்த நாடு எவ்வளவு தூரம் சீரழிந்து போய் இருக்கிறது என்பதற்கு சிறந்த நிறுவு பணம்


Mediagoons
ஏப் 03, 2025 13:41

நாட்டின் மிகப்பெரிய நாடகங்களில் இதுவும் ஒன்று. கடந்த பத்து வருட காலமாக நடக்கும் ஒன்று


vivek
ஏப் 03, 2025 14:55

முடிந்தால் இரு. இல்லை பாக்கிஸ்தான் ஓடி போலாம்


Mediagoons
ஏப் 03, 2025 13:37

நாட்டில் உள்ள அனைத்தையும் சுரண்டிவிட்ட அந்நியர்களுக்கு விற்றுவிட்டு கும்பல் இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் கொள்ளையடிக்க இடம் தேடி அலைகிறது


கல்யாணராமன் சு.
ஏப் 03, 2025 12:51

மற்ற எல்லா மதத்தினரின் நிலங்களின் மீது வரும் உரிமை வழக்குகளுக்கு நீதி மன்றம் சென்று தீர்ப்பு வாங்கிவரும் நிலையில், முஸ்லிம்களின் காப்பாளரான வக்ப் ஆணையங்கள், மற்றவர்களின் மீது தொடுக்கும் வழக்குகளுக்கு அவர்களே நீதிமன்றங்களாக செயல்படுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இல்லையா ?


கிருஷ்ணதாஸ்
ஏப் 03, 2025 11:14

நேரு தனது சொந்தக் காசில் பாரலிமென்ட் பில்டிங் கொடுத்தார்னு சொல்றாங்களே!


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 03, 2025 09:54

உண்மையான வக்ப் சொத்துகளை பறிக்க மாட்டோம். பிறர் சொத்துகளை வக்ப் வாரியம் பறிக்கவும் விட மாட்டோம், என, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்... வந்தேறிகளிடம் உண்மையான சொத்தா ?? எங்கிருந்து ??


Bahurudeen Ali Ahamed
ஏப் 03, 2025 16:57

தர்மராஜ் வரலாற்று அறிவு இல்லாமல் பிதற்றவேண்டாம், யார் வந்தேறிகள் என்று வரலாறு அறிந்தவர்களுக்கு தெரியும் உம்மைப்போல் வாட்ஸ்ஆப் யூனிவர்சிட்டி மாணவர்களுக்கு தெரியாது, கொஞ்சமாவது கடவுள் கொடுத்ததை உபயோகியுங்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 03, 2025 21:08

ஒரு நாடே தூக்கிக்கொடுக்கப்பட்டது வேடதாரிகளால்.. வந்தேறிகள் இல்லன்னா வந்தேறிகளின் வாரிசுகள், தலைமுறைகள், வித்துக்கள் ...... இப்ப தெளிவாயிடுச்சா? ஓகேவா ?? கடவுள் கொடுத்ததை பயன்படுத்துங்கள் ன்னு அதை பயன்படுத்தாத .., அறிவுறுத்தக் கூடாது நண்பரே .....


Bahurudeen Ali Ahamed
ஏப் 05, 2025 13:06

தெளிவாக ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் இந்திய இஸ்லாமியர்கள் யாரும் வெளியில் இருந்து வந்தவர்கள் இல்லை, வக்ப் சொத்து இஸ்லாமியர்களால் வக்ப் வாரியத்திற்கு கொடுக்கப்பட்டது, எவ்வளவு சொன்னாலும் உங்களுக்கு புரியாது நீங்கள் கண்கட்டிவிட்ட குதிரை போன்றவர்கள் இஸ்லாமிய மதத்தின் அல்லது இஸ்லாமியமத நம்பிக்கையின்பேரில் எதிர்க்கருத்து அல்லது எதிர்நடவடிக்கை அமைந்தால் அது நல்லதோ கெட்டதோ சிந்திக்காமல் ஆதரவளிக்கும் சில பேரில் நீங்களும் ஒருவர்


ஆரூர் ரங்
ஏப் 03, 2025 09:19

இங்க கிறித்தவர்கள் போட்ட பிச்சையில் அமைந்த நாத்திக ஆட்சி ஹிந்து ஆலயங்களை கட்டுப்படுத்தி சீரழிக்கிறது. லோக்சபா வில் வக்ஃபு மூலம் சுரண்டும் பணக்கார முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் குடுக்குறாங்க. ஏமாந்த ஹிந்து தமிழர்கள் திராவிட ரவுடிகளுக்கு வாக்களிக்கிறார்கள்.


Velan Iyengaar, Sydney
ஏப் 03, 2025 07:59

இங்கே முட்டு குடுக்கும் அனைவரும் முதலில் தங்களது அனைத்து சொத்துக்கள் வக்பு வாரியத்துக்கு தானம் செய்ய வேண்டும். பிறகு இங்கே வந்து கதறவும்


V Venkatachalam
ஏப் 03, 2025 14:22

முதலில் உன் சொத்தை வக்ஃப் க்கு தானம் செய்துட்டு அப்புறம் இங்க வா.. வால் அறுந்த நரி மற்ற நரிகளை கூப்பிட்டு வாலை அறுத்துக்க சொன்ன கதையாக இருக்கிறது உன்னோட உபதேசம்.. உன்னோட ஊளை ரொம்ப ஓவரா இருக்கு..


Appan
ஏப் 03, 2025 06:44

முன்னாள் பிரதமர் மன்மோகன் சொன்னது என்ன என்று தெரியுமா ?. இந்தியாவில் உள்ள சொத்துக்களுக்கு முதல் உரிமையாளர்கள் இஸ்லாமியர்கள் என்று சொல்லி சட்டம் இயற்றினார்கள். இதோடு காங்கிரஸ் என்ற கட்சி இந்தியாவில் அழிந்து விட்டது .ஒரு இந்து நாட்டில் இவர்கள் இப்படி சட்டம் எப்படி இயற்ற முடிந்தது ? இன்னும் மேற்கு நாடுகள் இந்தியாவை ஏளனம் செய்து கார்ட்டூன் போடுகிறார்கள். மத்திய அரசின் முக்கிய வேலை இப்படி பட்ட செய்திகழ் வறாமல் பார்ப்பது தான்..அதை விட்டு மத்தியில் ஆளும் பிஜேபி மாநிலங்களை மிரட்டிக்கொண்டு நேரத்தை வீணடிக்கிறார்கள்


சமீபத்திய செய்தி