உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மத்திய அரசு முடிவு

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மத்திய அரசு முடிவு

புதுடில்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு தீர்மானத்தை கொண்டு வர உள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். கடந்த மார்ச் 14ல், டில்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்ட போது, எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

சர்ச்சை

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'இந்த பணத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறினார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். இந்த குழுவினர் நடத்திய விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து, நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும்படி, யஷ்வந்த் வர்மாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால் முரண்டு பிடித்தார். அதிருப்தி அடைந்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, விசாரணை குழுவின் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தார்.இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக, பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒப்புதல்

ஜூலையில் துவங்கும் பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. லோக்சபா சபாநாயகர் அல்லது ராஜ்யசபா தலைவரின் ஒப்புதலுக்கு பின், நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்யலாம். இரு சபைகளிலும் தீர்மானத்துக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்கள் ஓட்டளிக்க வேண்டும். பின், ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின், சம்பந்தப்பட்ட நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

CHARUMATHI
மே 29, 2025 11:17

Well done like this take action against those SC judges who questioned Governor and president actions


Kanns
மே 29, 2025 07:26

Like General Citizens, Why Not FIRd, Arrested-Defamed-Prosecuted-Punished by UnBiased NonAdvocateJudge Courts or Supreme Loksabha JPC. Arrest-Sack-Punish All Concerned-GravelyConspiring Police& Judges Who Biasedly Failed/Blocking in FIR Regn, Investions-Arrested-Defame-Prosecution-Convictions


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை