மேலும் செய்திகள்
வெள்ளி இறக்குமதிக்கு உரிமம் கட்டாயம்
17-May-2026
புதுடில்லி: 99.9 சதவீத துகள், தூள் மற்றும் பிற வடிவிலான வெள்ளி இறக்குமதிக்கும் மத்திய அரசின் அனுமதி பெற வெண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேற்காசிய போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்க, தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகளை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், 99.9 சதவீத துகள், தூள் மற்றும் பிற வடிவிலான வெள்ளி இறக்குமதிக்கும் மத்திய அரசின் அனுமதி பெற வெண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; நகை வியாபாரிகளால் மேற்கொள்ளப்படும் வெள்ளி இறக்குமதி, இனி வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தால் ( DGFT) வழங்கிய செல்லுபடியாகும் இறக்குமதி அங்கீகாரத்தின் அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கப்படும். டிஜிஎப்டியின் அங்கீகாரத்திற்குபட்டு, தூள் வடிவம், துகள்கள் மற்றும் வெள்ளியின் எடையில் 99.9 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட வெள்ளி இறக்குமதிக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
17-May-2026