உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்: வருவாய்த்துறை செயலராக அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமனம்

மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்: வருவாய்த்துறை செயலராக அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசில் பல துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டு உள்ளார்.மத்திய அரசின் பல துறைகளின் செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கு நியமனங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.இதன்படி தற்போது, பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக இருக்கும் கர்நாடகாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அர்விந்த் ஸ்ரீவஸ்தவா, வருவாய்த்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.செலவினங்கள் துறை செயலாளராக வும்லோன்மாங் வுல்னம் நியமனம் செய்யப்பட்டார்.கேபினட் செயலகம், ஒருங்கிணைப்புத்துறை செயலாளராக மனோஜ் கோவிலும்கலாசாரத்துறை செயலாளராக விவேக் அகர்வாலும் சந்தோஷ் குமார் சாரங்கி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை செயலாளர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

thehindu
ஏப் 19, 2025 08:32

கூடாரம்


Sampath Kumar
ஏப் 19, 2025 08:25

ஸ்ரீவாஸ்தவர்களும் பட்டாச்சாரியர்களும் தான் இந்த பதவிக்கு வரமுடியும் மற்றவர்கள் எல்லாம் நஹி நஹி நஹி போங்க


அப்பாவி
ஏப் 19, 2025 08:01

ஓ... அங்கேயும் ஆட்டையை தடுக்க மாற்றமா இல்லே இங்கே மாதிரி வேறு வேலையில்லாமல் செய்யறமாதிரியா?


K.n. Dhasarathan
ஏப் 18, 2025 21:03

வருவாய் துறையிலே இப்போவாவது இட ஒதுக்கீடு பின் பற்றப்படுகிறதா ? அல்லது பொய் ஜே அரசின் ஏதேச்சதிகார நியமனத்தில் போகிறதா ?


புதிய வீடியோ