உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை: பிப்.,14ல் நடக்கிறது

விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை: பிப்.,14ல் நடக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் வரும் பிப்., 14ம் தேதி அன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டில்லியை நோக்கி பேரணியாக கிளம்பினர். ஆனால், பஞ்சாப் ஹரியானா மாநில எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல விவசாய சங்கத்தினர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதில், விவசாய சங்கத் தலைவர் ஜக்கித் சிங் தலேவால், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அங்கு அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தார்.இந்நிலையில், விவசாய சங்கத் தலைவர்களை மத்திய விவசாயத்துறை கூடுதல் செயலர் பிரியா ரஞ்சன் தலைமையிலான அதிகாரிகளை விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இதில், வரும் 14ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்து உள்ளது. இதனை விவசாய சங்க தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.இதனையடுத்து ஜக்கித் சிங் தலேவால், மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டு உள்ளார். இருப்பினும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Karthik
ஜன 20, 2025 18:36

இவர்கள் உண்மையான விவசாயிகளே அல்ல


jayvee
ஜன 20, 2025 05:10

தீவிரவாதிகளை வேரறுக்கவேண்டும் ..அதே போல கார்பொரேட் விவசாய கம்பெனிகளை ஒழிக்க வேண்டும்.. ரிலையன்ஸ் அமேசான் மோர் போன்ற முதலையலால் இன்று அரிசி விலை 70க்கும் மேல்


தாமரை மலர்கிறது
ஜன 19, 2025 22:56

போராட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு சீர்கேட்டை உருவாக்கும். இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.


nagendhiran
ஜன 19, 2025 13:26

உண்மையான விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை செய்யுங்க? இடைதரகர்களிடம் வேண்டாம்?


புதிய வீடியோ