உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவிடம் 2.50 லட்சம் டன் மாம்பழம் வாங்கும் மத்திய அரசு

கர்நாடகாவிடம் 2.50 லட்சம் டன் மாம்பழம் வாங்கும் மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில், மாம்பழ விவசாயிகள் நஷ்டம் அடைவதை தடுக்க, மத்திய அரசு, 2.50 லட்சம் டன் மாம்பழங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது.கர்நாடகாவில், நடப்பாண்டு மாம்பழங்களின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால், மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்து தப்பிக்க விவசாயிகள், 'மாம்பழங்களை அரசே வாங்கி கொள்ள வேண்டும்' என கர்நாடக மாம்பழ மேம்பாட்டு வாரியத்தை வலியுறுத்தினர்.இது குறித்து, மாநில விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி, மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.அப்போது, கர்நாடக மாம்பழ விவசாயிகள் சந்திக்கும் சிக்கல்கள், மாம்பழ விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி குறித்து செலுவராயசாமி விளக்கினார்.விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக தொகையை செலுத்தும் திட்டத்தின் வாயிலாக, மாம்பழங்களை வாங்கி கொள்ளும்படி, செலுவராயசாமி கேட்டுக் கொண்டார்.இதை கேட்ட சிவராஜ் சிங் சவுகான், 2.50 லட்சம் டன் மாம்பழங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளதாகக் கூறினார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Yasararafath
ஜூன் 23, 2025 18:36

இந்த திட்டம் மத்திய அரசு தமிழ்நாட்டிற்க்கு ஏன் செய்யவில்லை


Udhay Kumar
ஜூன் 23, 2025 16:20

இது தமிழ்நாட்டுக்கு கூட செய்யலாம் .. இங்கும் மாம்பழ விவசாயிகள் பயனடைவார்கள் .. ஆனால் மத்திய அரசு செய்யுமா ???


Iyer
ஜூன் 23, 2025 09:16

மாம்பழம் மிக நல்ல சத்துள்ள கனியாகும். குறிப்பாக DIABETES உள்ளவர்கள் மாம்பழத்தை சமைக்காமல் & PROCESS செய்யாமல் கடித்து சாப்பிடலாம். மாம்பழம் தின்றால் ரத்த சக்கரை அதிகரிக்கும் என்று ALLOPATHY டாக்டர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட PROCESS எந்த பழ JUICE ம் நல்லதல்ல


ஆரூர் ரங்
ஜூன் 23, 2025 12:26

மூட நம்பிக்கை. மாம்பழம் மட்டுமல்ல. எல்லா வகை இனிப்புப் பழங்களிலும் குளூகோஸ்


மீனவ நண்பன்
ஜூன் 23, 2025 08:45

கோவாவில் முந்திரி பழங்களிலிருந்து மது உற்பத்தி ஆகிறது ..மகாராஷ்டிராவில் ஆரஞ்சு பழத்திலிருந்து மது உற்பத்தி ஆகிறது ..திராட்சை பழங்களிலிருந்து ஒயின் தயாராகிறது ...மாம்பழம் என்ன பாவம் பண்ணியது .. திராவிட மாடலில் ஒரு புது ரக தயாரிப்பு கொண்டுவந்து குடிமகன்களுக்கு மகிழ்வு ஏற்படுத்தலாமே


Rajan A
ஜூன் 23, 2025 13:41

இந்தா பிடி 20000 காசுகள். மன்னார் படா கூஸ் ஹுவா.


Iyer
ஜூன் 23, 2025 07:38

PESTICIDE எனும் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்தால் - நம் நாட்டு மாம்பழங்கள் உலக சந்தையில் தங்கத்தைவிட அதிக விலைக்கு விற்கும். PESTICIDES க்கு பதிலாக NEEM OIL வேப்பெண்ணை SPRAY செய்யலாம்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 23, 2025 07:18

மதவாத பாஜக அரசு ஏன் மாம்பழங்களை மட்டும் வாங்குகிறது ஏன் பலாபழங்களை வாங்கவில்லை இதிலிருந்தே அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லக்கேட்டு நடக்கிறார் மோடி என்பது தெரிகிறதா ...கொய்யப்பழங்களை வாங்காமல் இருப்பதே 7G மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுதான் ...மோடிஅரசு வாழைப்பழங்களை வாங்காமல் இந்தியை திணிக்க பார்க்கிறது ,,எனக்கு வந்த டெல்லி தகவல்படி மோடிஅரசு இனிமேல் இலந்தை ,நாவல் பழங்களைவாங்க போவதில்லை ... இதுதான் சதித்திட்டம் .. இதை எதிர்த்து கழக இளைஞரணிநாடெங்கிலும் மஞ்சள் பலூன் பறக்கவிடும்


Pandi Muni
ஜூன் 23, 2025 08:28

நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.


visu
ஜூன் 23, 2025 09:11

அவர் திமுக வை கிண்டல் செய்கிறார்


sasikumaren
ஜூன் 23, 2025 07:02

அல்போன்சா, மல்கோவா இதெல்லாம் இன்னும் பழ கடைகளில் காண முடியவில்லை இதில் ஒரு மாநில மாம்பழங்களை வாங்கி வைத்து கொண்டு மத்திய அரசு என்ன செய்ய போகிறது அதுதான் புரியவில்லை


நசி
ஜூன் 23, 2025 06:57

டாஸ்மாக் நிறுவனம் 55000 கோடி வருமானம் கொண்டது அதனை இந்த விவசாய பொருள் வாங்கி பதப்படுத்தி விற்பனைக்கு பயன்படுத்திய நல்ல காரியங்கள் மக்களின் சுகாதாரத்துக்கு பயன்படுமாறு டாஸ்மாக் செயல்படலாம் ..திராவிட சாராய ஆலை அதிபர்கள் நாட்டிற்கு நல்லது செய்யலாமே


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 23, 2025 06:40

இதே போலத்தான் அல்வா வியாபாரிகள் அடையும் நஷ்டத்தையும் போக்க அரசே அவர்களிடமிருந்து அல்வா வாங்கி பொதுமக்களுக்கு கொடுக்கிறார்கள் போல இருக்கிறது.


மீனவ நண்பன்
ஜூன் 23, 2025 06:35

இந்தியாவில் உற்பத்தி ஆகும் மாம்பழங்கள் பேஸ்டிசைட் அதிகம் என்பதால் ஏற்றுமதி ஆவதில்லை ..டயபடிஸ் அதிகமாக இருப்பவர்கள் மாம்பழத்தை தொடுவதில்லை …பதப்படுத்தி ஆண்டு முழுவதுமே விற்பனை செய்யலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை