உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதிகள் நியமன அதிகாரத்தை பறிப்பதே மத்திய அரசின் நோக்கம்: கபில்சிபில்

நீதிபதிகள் நியமன அதிகாரத்தை பறிப்பதே மத்திய அரசின் நோக்கம்: கபில்சிபில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை, 'கொலீஜியம்' அமைப்பிடம் இருந்து பறிப்பதே மத்திய அரசின் நோக்கம்,'' என, ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் குற்றஞ்சாட்டினார். அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு, டில்லியில் சொந்தமாக உள்ள வீட்டில் இருந்து, கடந்த மார்ச்சில் கட்டுக்கட்டாக, 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக அடுத்த மாதம் துவங்கும் பார்லி., மழைக்காலக் கூட்டத்தொடரில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், டில்லியில் நேற்று, ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியதாவது:வகுப்புவாத கலவரங்களை துாண்டும் வகையில் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவை பதவி நீக்கம் செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த தீர்மானம் நிலுவையில் உள்ளது. ஆனால், உரிய விசாரணை நடத்தாமல் ஆதாரங்களின்றி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு துடிக்கிறது. என்னை பொறுத்தவரை, அவர் ஒரு நல்ல மனிதர். இதை நான் மட்டுமல்ல, அனைத்து வழக்கறிஞர்களும் ஒப்புக்கொள்வர். நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை. அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது. அதே சமயம், ஆதாரங்களுடன் சிக்கியுள்ள நீதிபதி சேகர் யாதவை மத்திய அரசு பாதுகாக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பிடம் இருந்து பறித்து, தேசிய நீதித் துறை நியமன கமிஷனிடம் வழங்குவதே மத்திய அரசின் நோக்கம். அதற்காகவே நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இதை எதிர்க்கட்சிகள் ஏன் புரிந்து கொள்ளவில்லை?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Anu Sekhar
ஜூன் 25, 2025 18:17

என்ன , அந்த லஞ்ச நீதிபதிக்கு நீங்க கொடுத்த லஞ்சம் மாதிரி வேற நீதிபதி கிடைக்கலை.?


நிவேதா
ஜூன் 20, 2025 13:16

இந்த மனிதரை அவர் பிறந்த நாட்டுக்கே அனுப்பி விடலாம்


sankaranarayanan
ஜூன் 19, 2025 18:34

என்னை பொறுத்தவரை, அவர் ஒரு நல்ல மனிதர். இதை நான் மட்டுமல்ல, அனைத்து வழக்கறிஞர்களும் ஒப்புக்கொள்வர்.கபில் ஐபலால்தான் இந்திய நீதிமன்றமே குற்றமுள்ள இடமாக மாறிவிட்டது.ஒவ்வொரு வழக்குக்கும் பல கோடி ரூபாய் வாங்கும் ஒரே ஒரு நியாயமற்ற வக்கீல்.பேசவே தகுதி இல்லை ஊரறிய நடந்த இந்த வழக்கை திசை திருப்பவே இவர் செய்யும் தில்லாலங்கடி வேலை இனி நிற்காது.


Narayanan
ஜூன் 19, 2025 12:54

கபில்சிபிலிடம் போகும் வழக்குகள் அனைத்துமே லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளிடம் இருந்துதான். அவர்களும் வழக்கில் இருந்து தப்பவே பெரும் பணம் கொடுக்கவும். கபில்சிபில் அதை பயன்படுத்தி அவர்களுக்கு பயமூட்டி பெரிய தொகையை கறப்பவர். அது மட்டும் அல்லாது எந்த நீதிபதி லஞ்சம் பெற்றுக்கொண்டு தீர்ப்பை அளிப்பார்கள் என்று நன்கு அறிந்தவர். ஆகவே இப்போதே மத்திய அரசு, மற்றும் அமலாக்கத்துறை இவர்களுக்கு ஏதிராகவே தீர்ப்பளிக்கும் நிலைக்கு வைத்திருக்கிறார். நாட்டின் சட்டத்துறை நாசமாகிக்கொண்டு இருக்கிறது.


angappan s
ஜூன் 18, 2025 20:09

Kabil.sibal.antha.judgukku.kasu.vangi.kuduthiruppan.pola.erukku.athanal.than.eppady.pesaran.colkegiuthukitte.judgugalai.appiint.pandra.adhigaram.erukkave.koodathu.evanungalukku.vendappatta.advacatugal.olalukku.udanthaiya.erunthavanunga.palaiya.judgugalin mavanungalukku.post.kudukkaranunga.supreme.court.spl.piwera.rathu.seithu. sattam.kondu.vara.vendum.dmk.karanungagittw.oolal.panatha.vangittu.avanugalukku.sadhagama.judgument.kudukkirathe.velaiya.pochu.


Gopalakrishnan Thiagarajan
ஜூன் 18, 2025 19:28

வர்மாவை விசாரிக்கும்போது தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் தான்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 18, 2025 15:19

நீதிபதிகளை பலதரப்பட்ட தேர்வுகள் நடத்தி தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும். அல்குவைதா காங்கிரஸ் ஆட்சியில் நியமித்த நடைமுறைகளை ஒழிக்க வேண்டும்.


அருண் பிரகாஷ் மதுரை
ஜூன் 18, 2025 13:49

காங்கிரஸ் கட்சி அவரை நல்லவர் என்று கூறவில்லை என்றால் அவர் கண்டிப்பாக நல்லவராக இருக்க வாய்ப்புள்ளது.. இவர்கள் நல்லவர் என்று சொல்லும்போதே தெரிகிறது நீதிபதியின் நேர்மை.. கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். நடவடிக்கை எடுக்கிறார்கள்.. உங்களுக்கு என்ன கஷ்டம்..


Kulandai kannan
ஜூன் 18, 2025 13:43

வர்மாவை நீக்கச் சொன்னது உச்சநீதி மன்றம்.


Subramanian N
ஜூன் 18, 2025 13:38

இவன் ஒரு ஊழல் பெருச்சாளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை