உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்டிஏ.,வில் சீர்திருத்தம்: கருத்து கேட்கிறது மத்திய அரசு குழு

என்டிஏ.,வில் சீர்திருத்தம்: கருத்து கேட்கிறது மத்திய அரசு குழு

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடு புகாரை தொடர்ந்து அதனை நடத்தும் தேசிய தேர்வு முகமையை( என்டிஏ) மறுசீரமைப்பது அல்லது அதனை சீரமைப்பது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கும்படி மத்திய அரசு அமைத்துள்ள குழு கூறியுள்ளது.நீட் தேர்வில் நடந்த முறைகேடு மற்றும் குளறுபடியை தொடர்ந்து அந்த என்டிஏ.,வை சீரமைப்பது குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இந்நிலையில், இந்த குழுவினர், அந்த அமைப்பில் சீர்திருத்தம் செய்வது அல்லது மறுசீரமைப்பு செய்வது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது ஆலோசனை, கருத்துகளை தெரிவிக்கலாம் எனக்கூறியுள்ளது. இதற்காக இணையதள முகவரியை வெளியிட்டுள்ள அந்தக்குழு(https://innovateindia.mygov.in/examination-reforms-nta/) ஜூலை 7 வரை கருத்து தெரிவிக்கலாம் எனக்கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்புசாமி
ஜூன் 28, 2024 19:43

பார்லிமெண்ட்டில் விவாதிக்க மாட்டாங்களாம். மக்களிடம் கருத்து கேப்பாய்ங்களாம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 21:01

அறிவாளி ...... பார்லிமென்ட்டில் நீட் ஐ ஆதரித்து அந்த தீர்மானம் நிறைவேற்ற உதவியது யார் ????


GMM
ஜூன் 28, 2024 19:18

Management, state, reservation கோட்டா உள்ளது. இது அதிக சலுகைகள். 12ம் வகுப்பு பாடத்திட்டம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். பள்ளிக்கு பள்ளி மாறுபடும். நாடு முழுவதும் ஒரே கேள்வி தாளுக்கு பதில் மாறுபட்ட பல கேள்வி தாள் தயாரித்து, தேர்வு நேரத்தில் எந்த இடத்திற்கு எந்த கேள்வி தாள் அனுப்பபட்டது என்று யாரும் அறிய முடியாமல் செய்து விட வேண்டும்.


MADHAVAN
ஜூன் 28, 2024 18:57

உத்தரபரதேசம், பீஹார் மத்தியபிரதேசம் போன்ற பிஜேபி ஆளும் மாநிலங்களில் உள்ள முட்டாள்கள் எல்லோரும் நீட் பாசவது எப்படினு இப்போ தெரியுது,


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 17:06

பாஜக அரசு மக்களின் கருத்துக்களை ஜனநாயக முறைப்படி அறிகிறது ..... அதே நாட்டில் மக்களை மதுவால் கொல்லும் அரசுகளும் உண்டு ............


கனோஜ் ஆங்ரே
ஜூன் 28, 2024 19:30

நீட்..ல இந்திக்கார தற்குறிப் பசங்க எப்படி பாஸ் பண்ணி... முதல் ரேங்க் வாங்குறாங்கன்னு இப்ப தெரியுதா...? இந்திக்காரனுங்களுக்கு, தமிழ்நாட்லந்து ஒரு வருஷத்துக்கு, தமிழனுங்க 7000 டாக்டரா வெளியே வர்றானுங்க...ங்ற வயிற்றெரிச்சல்ல.. திட்டமிட்டு, “நீட்” கொண்டு வந்தானுங்க, இந்திக்காரனுங்க... ஏன், இதுபோன்று மோசடிகளை செய்து, படிக்காத இந்திக்கார பசங்கள பாஸ் செய்ய வைத்து... அவங்கள தமிழ்நாட்டு மெடிகல் காலேஜ்ல சீட் வாங்க வைப்பதுதான் திட்டம். அதுக்கு வசதியா நீட் கொண்டு வந்தானுங்க...?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை