உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுரங்கம் அமைத்து வட மாநிலங்களுக்கு சிந்து நதிநீர்: மத்திய அரசு புது திட்டம்!

சுரங்கம் அமைத்து வட மாநிலங்களுக்கு சிந்து நதிநீர்: மத்திய அரசு புது திட்டம்!

புதுடில்லி: சிந்து நதிநீரை, சுரங்கம் அமைத்து வட மாநிலங்கள் பலன்பெறும் வகையில், இமயமலையில் உருவாகும் பியாஸ் நதியுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.நம் அண்டை நாடான திபெத் மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் ஆறு நதிகள், சிந்து நதி தொகுப்பாக கூறப்படுகிறது. இந்த நதிகள், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக பாய்ந்து, அரபிக் கடலில் கலக்கின்றன. சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட்ட பிரிவினையைத் தொடர்ந்து, இந்த நதிகளை பயன்படுத்துவது தொடர்பாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் சர்ச்சை ஏற்பட்டது.1960ல், உலக வங்கியின் முன்னிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. உலக அளவில் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட ஒப்பந்தமாக இது இருந்தது.இந்த ஒப்பந்தத்தின்படி ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகள், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த ஆறு நதிகளில் இருந்து கிடைக்கும் 21,800 கோடி கன அடி நீரில், 30 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள, 70 சதவீதம் பாகிஸ்தானுக்கு கிடைத்து வந்தது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் தெரிவித்த மிரட்டலையும், எதிர்ப்பையும் இந்தியா நிராகரித்துவிட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் தடுக்கப்பட்டால் மட்டுமே இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய முடியும் என உறுதிபடத் தெரிவித்துவிட்டது.ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் கிடைக்கும் உபரி நீரை உபயோகமாக பயன்படுத்தி கொள்வதற்கும், இந்தியாவில் வேறு திட்டங்களுக்கும் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.இந்நிலையில் வட மாநிலங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிந்து நதியில் உற்பத்தி ஆகும் நீரை, 14 கிமி தூரத்துக்கு சுரங்கம் அமைத்து பியாஸ் நதிக்கு கொண்டு செல்வது குறித்து மத்திய அரசு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை 2029ம் ஆண்டுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர், இது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது இந்த திட்டத்துக்கான விரிவான அறிக்கையை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான அறிக்கையை தயாரிக்கும் பணியில் எல் அண்ட் டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அடுத்தாண்டிற்குள் விரிவான திட்டம் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகே இந்தத் திட்டம் குறித்து மத்திய அரசு இறுதி முடிவெடுக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ponvairan C
செப் 26, 2025 20:39

பாகிஸ்தான விவசாயிகளை கஷ்டப்படுத்தாமல் மீதமாக உள்ள வீணாகும் தண்ணீரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்


Barakat Ali
செப் 26, 2025 07:32

LT யின் பங்கு விலை கணிசமாக உயரும் ..... வாங்கிப்போடுங்க .....


Barakat Ali
செப் 26, 2025 07:30

மற்ற விஷயங்களுக்கு உடனே பொங்கி காட்டமாக அறிக்கை விடும் துக்ளக்கார், திராவிடம் பேசும் துக்ளக்கார் தென்னக நதிகளையும் அத்துடன் சேர்த்து இணைக்க வேண்டும் என்று கேட்பாரா ???? திமுக எம் பி க்கள் மக்களவையில் கோரிக்கை எழுப்பாத தயாரா ???? என்ன கொத்தடிமைகளே ...... பதில் உண்டா ????


Barakat Ali
செப் 26, 2025 07:28

கோல்மால் புர கொத்தடிமைகள் கவனிக்கவும் ..... மே 16. 2012 செய்தி .... இளைஞர் காங்கிரஸைப் புத்துயிர் பெறுவதற்காக தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, இந்தியாவில் நதிகளை இணைப்பது ஒரு பேரழிவாகவும், சுற்றுச்சூழலுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார். தனது மூன்று நாள் பயணத்தின் கடைசி நாளில் கிருஷ்ணகிரிக்குச் செல்வதற்கு முன், சென்னையில் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ராகுல், நதி நீர் பங்கீடு தொடர்பான சர்ச்சைகளை மாநிலங்களுக்கு இடையே தீர்க்க வேண்டும் என்றார்.


VenuKopal, S
செப் 25, 2025 21:48

அடிமைகள் இங்கே என்ன உருட்டுகிறார்கள்? காசாவுக்கு டிக்கெட் போட்டு அங்கே சென்று வரலாற்று போராட்டம் செய்து கடும் கண்டனம் தெரிவித்து விடுதலை வாங்கித் தர வேண்டும்.


K V Ramadoss
செப் 25, 2025 20:33

இந்த செய்தியை இப்போது வெளியிட்டிருக்க வேண்டாம் ...


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 25, 2025 20:18

இறுதிசெய்யப்படாத திட்டத்தின் படி சிந்து நதியை கால்வாய்கள் மற்றும் சுரங்கங்கள் மூலமாக மற்ற சில நதிகளுடன் இணைக்கும் முயற்சி. உத்தேச திட்ட செலவு 5,000 கோடி. திட்டம் செயல்படுத்தும் தூரம் சில நூறு கிலோமீட்டர்கள். முழு விபரங்கள் இன்னும் சில மாதங்களில் தெரிய வரும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ஜம்மு, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்கள் பெரிதும் பயன் பெறும். திட்டம் வெற்றிபெற பிரார்த்திப்போம். வட மாநில மக்கள் வளம் பெற்றால் இந்தியா முழுமைக்கும் நன்மை விளையும்.


Venugopal S
செப் 25, 2025 20:15

அப்புறம் என்ன? மறுபடியும் பெட்ரோல் விலையையும்,ஜி எஸ் டி வரியையும் ஏற்றி விட்டு அந்தப் பணத்தில் சிந்து நதியில் சுரங்கம் கட்டினோம் என்று சங்கிகள் உருட்ட ஆரம்பித்து விடுவார்கள்!


வாய்மையே வெல்லும்
செப் 25, 2025 22:18

இதே வாய் பெட்ரோலுக்கு ஐந்து ருபாய் மானியம் என திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் செய்யிறோம்னு சொல்லிட்டு அப்புறம் ஒண்ணுத்தையும் நிறைவேற்றவில்லை என வேணுகோபால் பேசுவாரா...அப்படி பேசினால் கிடைக்கிற கைக்காசு கிடைக்காமல் போச்சுதுன்னா ? இப்படியும் வாழ்ந்து என்ன பயன் கண்டீர் ?


தமிழ்வேள்
செப் 25, 2025 20:11

பக்கி பயல்களுக்கு சிந்து நதி நீர் என்ன, எந்த விதமான தண்ணீரும் தரத் தேவையில்லை.. அப்படி கொடுக்காமல் இருப்பதே ஹலால் ஆனது..... நோ சிந்து நதி நீர்.... நோ வாட்டர் ஷேரிங்...


Mr Krish Tamilnadu
செப் 25, 2025 19:25

முயற்சி திரு வினையாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை