காரீப் பயர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது மத்திய அரசு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நடப்பு 2025 - 26 ம் நிதியாண்டு காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.விவசாயிகள் அறுவடை செய்யும் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 14 காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன்படி விலை உயர்த்தப்பட்ட பயிர்கள் விபரம்( விலை உயர்வு ஒரு குவிண்டாலுக்கு)நைஜர் விதை - ரூ.820ராகி( கேழ்வரகு) - ரூ.596பருத்தி - ரூ.589எள் - ரூ.579நெல் - ரூ.69துவரை பருப்பு- ரூ.450பாசிப்பயிறு - ரூ.86கடலை எண்ணெய் வித்து- ரூ.480சூரியகாந்தி எண்ணை விதை - ரூ.441சோயா பீன்ஸ் -436 உள்ளிட்ட 14 பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டு உள்ளது.இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: விவசாயிகளுக்காக முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 - 11 ஆண்டுகளில், காரீப் பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 2025 - 26 பருவத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு மொத்தம் ரூ.2,07,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.