உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு: மே 20க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு: மே 20க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடில்லி: வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை மே 20ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், வக்ப் வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். இது தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் அளிக்க அவகாசம் கோரி இருந்தது. இந்த வழக்கு இன்று (மே 15) மீண்டும் தலைமை நீதிபதி கவாய் அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, '' தற்போதைய சூழலில் வழக்கு விசாரணையை நீட்டிக்க வேண்டும். இடைக்கால உத்தரவு குறித்து வாதங்களை முன்வைக்க 2 மணி நேரம் வழங்கப்படும்'' என தலைமை நீதிபதி தெரிவித்தார்.இதையடுத்து, வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை மே 20ம் தேதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலை மையிலான அமர்வு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

spr
மே 20, 2025 17:37

இந்தக் கோயிலோ, இஸ்லாமிய கிருத்தவ ஆலையங்களோ அனைத்து ஆலயங்களின் சொத்துக்கள் குறித்த நிர்வாகம் அரசு வசமிருக்க வேண்டும் மத ரீதியான சடங்குகள் சம்பிரதாயங்கள் மட்டுமே அந்தந்த மதத் தலைவர்கள் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் அதில் அரசுத் தலையீடு இருக்கக்கூடாது பயன்படாத நிலங்களில் அனைத்து மதத்தவரும் பயன்படுத்தத் தக்க வகையில், கல்விக்கூடங்கள் மருத்துவ மனைகள் போன்ற பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டு, அதற்காக ஆகும் செலவை அந்த ஆலயங்களே அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் இவை எதுவும் நடைபெறவில்லையென்றால் இந்து அறநிலையத்துறையை அரசிடமிருந்து விடுவிக்க வேண்டுமென மனுவை சமர்ப்பிக்கலாம் இதனை செய்ய ஏற்றவர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஒருவரே


புதிய வீடியோ