உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

கயா: அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சி நிறுவனரும், பங்கிபூர் எம்எல்ஏவுமான பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.ராமர் கோயில் அறக்கட்டளைக்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம் குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பேட்டி; ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கலாம். அது சரியான ஒன்று. நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்களின் முக்கிய நம்பிக்கையாக ராமர் கோயில் உள்ளது. இங்கு பெருமளவு நடந்ததாக கூறப்படும் திருட்டு, முறைகேடுகள் ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.ராமர் கோயிலை ஒரு நம்பிக்கை ஸ்தலமாக மாற்றுவதில் பாஜ, விஹெச்பி ஆகியவையும் முக்கிய பங்கை ஆற்றி இருக்கின்றன. எனவே, இந்த குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இந்த விவகாரம் குறித்து அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். புதிய நபரை நியமிப்பதால் மட்டுமே இந்த பிரச்னை முடிவுக்கு வராது.இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

C.SRIRAM
செப் 04, 2026 20:46

கோவிலுக்கும் அரசுக்கும் நேரிடையாக என்ன சம்பந்தம் ?. வெள்ளை காகிதம் ...காட்டி விடலாம்

sankaranarayanan
செப் 04, 2026 20:31

என்னப்பா நீ அடிக்காத கொள்ளையா ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்காக நீ செய்ய அக்கிரமங்கள் பொறுக்கவே முடியாது எவ்வளவு கோடி பணம் சுருட்டினாய் என்னசெய்தாய் ஆங்காங்கே மக்களை பிரித்தாய் கட்சிகளை பிரித்தாய் நடுவில் உள்ளே புகுந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு பீகாருக்கு ஓடிப்போய்விட்டாய் உன்னுடைய நடத்தை வாழ்க்கையே விபரீதமானது நீ இனிமேல் அரசியல்பேசாதே கம்முனு கிட. அடித்த கோடிக்கணக்கான பணத்தை மக்களுக்கு தானம் தருமம் செய்

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை