உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம்: ஜூன் 6ல் தொடங்க மத்திய அரசு முடிவு

வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம்: ஜூன் 6ல் தொடங்க மத்திய அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.வக்ப் போர்டு சொத்து தொடர்பாக பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விவாதம் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்நிலையில், வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: * நாடு முழுவதும் உள்ள வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய, இந்த இணையதளம் தொடங்கப்படுகிறது.* அனைத்து வக்ப் சொத்துக்களும் 6 மாதங்களுக்குள் விரிவான தகவலுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.* சலுகைக் காலத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படாத சொத்துக்கள் சர்ச்சைக்குரியதாக கருதப்படும்.* சொத்துக்களின் நீளம், அகலம் மற்றும் புவிசார் குறிச்சொற்கள் கொண்ட இடங்கள் உள்ளிட்ட விரிவான விளக்கங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வக்ப் திருத்த சட்ட மசோதா பார்லிமென்டில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சமீபத்தில், இந்த மசோதாவுக்கு திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய போர்டல் தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sri Sri
ஜூன் 03, 2025 15:51

நமது நாட்டில் மத ரீதியான சிறுபான்மை சலுகை என்பது மிகவும் தவறான முடிவு. இந்த சலுகை நீக்கப்பட வேண்டும். இது நாட்டின் நலனை மிகவும் பாதிக்கிறது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். நாட்டின் நலன் கருதி இந்த சீர்திருத்தம் உடனே செய்ய வேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 03, 2025 12:53

இந்தியாவில் உள்ள தொன்னூறு சதவிகித வக்ப் சொத்துக்கள் எல்லாம் ஹிந்துக்கள் சொத்துக்கள்தான். அன்று ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் ஹிந்துக்களிடமிருந்து ஆட்டைபோட்டவைதான் இன்று உள்ள வக்ப் சொத்துக்கள் எல்லாம். போதாக்குறைக்கு அவர்கள் வாக்குக்காக இந்திய கேடுகெட்ட அரசியல்வாதிகள் அவர்களுக்கு தாரைவார்த்ததுதான் இன்றைய வக்ப் சொத்துக்கள். எல்லாம் திரும்பபெறவேண்டும்.


Rengaraj
ஜூன் 03, 2025 12:48

வக்ப் போன்று மற்ற சமூகத்தினரின் சொத்துக்களையும் இவ்வாறு பதிவிட வேண்டும். முதல் கட்டமாக கிராம வாரியாக சொத்துக்களை அடையாளம் கண்டு அதை இணையத்தளத்தில் பதிவிடலாம். கிராம நிர்வாக அதிகாரி துணையுடன் இதை செய்யலாம் . நமக்கு எவ்வாறு ஆதார் உள்ளதோ அதே போன்று நாட்டில் இருக்கும் ஒவ்வொரும் சொத்துக்கும் தனித்தனியாக அடையாள எண் அமைந்துவிட்டால் எதிர்காலத்தில் சொத்துக்களை நிர்வாகம் செய்வதும் சொத்துக்களின் மீதான வழக்குகளை கையாள்வதும் எளிதாக இருக்கும். ஏரியாவை அடையாளப்படுத்த தபால் துறை கையாளும் பின்கோடு முறை போன்று ஒரு தனிமுறையை கொண்டுவரலாம்.


vbs manian
ஜூன் 03, 2025 09:25

வரவேற்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை