உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர்களுக்கு நாற்காலி: கெஜ்ரிவால் மீது பா.ஜ., புகார்

வாக்காளர்களுக்கு நாற்காலி: கெஜ்ரிவால் மீது பா.ஜ., புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புது டில்லி: வாக்காளர்களுக்கு நாற்காலி கொடுத்ததாக, ஆம் ஆத்மி ஓருங்கிணைப்பாளர் மீது பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் வர்மா புகார் அளித்துள்ளார்.டில்லி சட்டசபை தேர்தல் பிப்.5 ஆம் தேதி நடைபெறுகிறது. பா.ஜ.,வின் புது டில்லி வேட்பாளர் பர்வேஷ் வர்மா, இவர் ஆம் ஆத்மி ஓருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடுகிறார்.இந்நிலையில் தொகுதியில் உள்ள குடியிருப்போர் நல சங்கத்தினருக்கு நாற்காலிகளை விநியோகிப்பதன் மூலம் கெஜ்ரிவால், நடத்தை விதிகளை மீறியதாக காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் வர்மாவின் தேர்தல் முகவர் சந்தீப் சிங் நேற்று புகார் அளித்தார். இது பி.என்.எஸ் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தெளிவாகக் கண்டறியக்கூடிய குற்றம், மாதிரி நடத்தை விதிகளை மீறுவதாகவும் உள்ளது.ஒரு நபர் டிராலியில் சில நாற்காலிகளை எடுத்துச் செல்வதைக் காட்டும் வீடியோ கிளிப்பையும் புகார்தாரர் வழங்கினார். தன்னை கெஜ்ரிவால் அனுப்பியதாக அந்த நபர் ஒப்புக்கொண்டதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.புது டில்லி தொகுதி வாக்காளர்களுக்கு பணம், சேலைகள், காலணிகள் மற்றும் பிற பொருட்களை விநியோகித்ததாக வர்மா மீது ஆம் ஆத்மி கட்சியும் கெஜ்ரிவாலும் தேர்தல் அதிகாரிகளிடம் பல புகார்களை அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
ஜன 20, 2025 17:16

இங்க தமிழக விடியல் திமுகவினரின் பொது கூட்டத்தில் ஏற்கனவே பிளாஸ்டிக் சேர் கொடுக்க பட்டது. கூட்டம் முடியும் வரை உட்கார்ந்து இருந்து முடிந்த பிறகு சேரை வூட்டுக்கு போகலாம் என்று பேசி கூட்டத்தை கூட்டினார்கள். போர்ஜ்ரி கெஜ்ரிவாலுக்கு ஐடியா கொடுப்பதே நம்ம விடியல் தான்.


Nellai Ravi
ஜன 20, 2025 18:30

விடியல் அல்ல. அதிமுக எடப்பாடி division.


sankaranarayanan
ஜன 20, 2025 17:07

நாற்காலிகளை விநியோகிப்பதன் மூலம் கெஜ்ரிவால் சட்டசபையில் நாற்காலிகள் இல்லாமல் போயிடும் பிறகு தெர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவையில் நிற்க வேண்டிய தருணம் வந்துவிடும் ஆதலால் தேர்தல் ஆணையமே இதில் தலையிட்டு நாற்காலிகளைத்தவிர மற்ற எந்த பொருளையும் வாக்காளர்களுக்கு கொடுக்க அனுமதிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை