உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணம்: தடுத்தது ஐசிசி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணம்: தடுத்தது ஐசிசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பி.சி.சி.ஐ., எதிர்ப்பு காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை சுற்று பயணத்தை ஐ.சி.சி., நிறுத்தி வைத்துள்ளது.ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்., மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. இந்தியா பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்(பி.சி.பி.,) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில் ஐ.சி.சி., தொடர்களின் போது போட்டியை பலப்படுத்தும் வகையில் தொடரை நடத்தும் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு 'டிராபி டூர்' செல்வது வழக்கம்.இதனடிப்படையில் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 2025 கோப்பை சுற்றுப்பயணம் நவ., 16ம் தேதி இஸ்லாமாபாத்தில் துவங்கி, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முர்ரி, ஹன்சா ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்ல பி.சி.பி.,திட்டமிட்டது.இதற்கு பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்தது. ஐ.சி.சி.,யிலும் புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து சாம்பியன்ஸ் டிராபி உடன் 'டிராபி டூர்' திட்டத்தை ரத்து செய்ய ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் திட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SUBBU,
நவ 16, 2024 06:23

பாகிஸ்தான் நடத்தும் இந்த ICC Champion Trophy யில் இந்தியா உட்பட மொத்தம் ஏழு நாடுகள் விளையாடுகின்றன. இதில் நம் இந்திய அணி மட்டும் பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தானில் விளையாடப் போவதில்லை என்று கூறிவிட்டது. சட்டப்படி போட்டியில் கலந்து கொள்ள மாட்டோம் என்கிற அணியை போட்டியில் இருந்து நீக்கி விடுவார்கள். ஆனால் நம் இந்திய அணியை நீக்கி விட்டு வேறொரு அணியை இந்த தொடரில் சேர்க்கவில்லை இந்தியா என்ற ஒரு நாடு வரவில்லை என்பதற்காக அந்த போட்டியை நடத்தும் நாட்டையே மாற்றப் போகிறார்கள். இப்படி மாற்றுவதை நீங்கள் எப்போதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த அதிசயத்தை இந்தியாவால் மட்டுமே நிகழ்த்த முடியும். கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியாதான் ஜாம்பவான். இந்த போட்டியை துபாயில் நடத்தினால் பாகிஸ்தானே தொடர்ந்து தொடரை நடத்தலாம் இல்லையென்றால் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்ற வாய்ப்பிருக்கிறது. அதே போல இந்தியா பாகிஸ்தான் வர மறுத்து சாம்பியன் டிராபி தொடரை வேறு நாட்டிற்கு மாற்றினால் பாகிஸ்தான் இந்த தொடரை புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறது அப்படி ஒருவேளை பாகிஸ்தான் ஓவராக சீன் போட்டு முரண்டு பிடித்தால் ஐசிசி பாகிஸ்தானுக்கு Bye Bye சொல்லிவிட்டு இந்த தொடருக்கு தகுதி பெறாத இலங்கை அணியை கூட்டிக் கொண்டு போய் தொடரை நடத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. பாவம் பாகிஸ்தானின் நிலைமை ரொம்ப கவலைக்கிடமாக உள்ளது.


ஆனந்த்
நவ 15, 2024 23:29

சீக்கிரமா ஒரு முடிவு எடுங்க


ஷாலினி
நவ 15, 2024 23:28

good decision


முக்கிய வீடியோ