உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலுடன் சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி; ஜெகன்மோகன் புதுகுண்டு

ராகுலுடன் சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி; ஜெகன்மோகன் புதுகுண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் எம்பி ராகுலுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், இதன் காரணமாகவே ஆந்திராவில் நடந்த ஓட்டு திருட்டு குறித்து ராகுல் பேசவில்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது; ஆந்திர சட்டசபை தேர்தலில் போது, மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை விட, எண்ணப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. டில்லி, மஹராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் நடந்த தேர்தல்களில் ஓட்டு திருட்டு நடந்ததாகக் குற்றம்சாட்டும் ராகுல், ஆந்திராவைப் பற்றி மட்டும் ஏன் பேசுவதில்லை. ஏனெனில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மூலமாக, ராகுலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி வருகிறார். அண்மையில் டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஆம்ஆத்மி தோல்வியை சந்தித்தது. அதைப்பற்றி ஏன் ராகுல் பேசவில்லை. ராகுல் தான் செய்யும் செயல்களில் நேர்மையில்லாதவர். அவரைப் பற்றி கருத்து சொல்ல என்ன இருக்கிறது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

MARUTHU PANDIAR
ஆக 13, 2025 21:38

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பிரதமர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக அன்றைய காங்கிரஸ் தலைவர்களிடையே ஓட்டெடுப்பு நடந்த தல்லவா? கட்சியிலும் அணுகுமுறையிலும் தியா கத்திலும் கட்சியினர் இடையே மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய படேல் 14 ஓட்டுக்களையும் ,நேரு ஒரே ஒரு ஓட்டையும் பெற்ற நிலையில் காந்தியின் நெருக்குதலால் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய நேரு இந்தியாவின் முதல் பிரதமராக முடிந்தது. பப்பு வீம்புக்காக கூறும் ஓட் சோரி அன்றைக்கே நடந்து விட்டது. நேரு குடும்பத்துக்காக.


Ramesh Sargam
ஆக 13, 2025 20:27

ராகுலுடன் சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி ஜெகன்மோகன் புதுகுண்டு. ரகசிய கூட்டணி என்று கூறுகிறார். பின் எப்படி இவருக்கு அந்த ரகசியம் தெரிந்தது. ஒருவேளை ஒட்டுக்கேட்டாரோ ...??


nagendhiran
ஆக 13, 2025 19:59

இல்லைனா"நீ அறுத்து "தள்ளிடுவீயா என்ன?


Kasimani Baskaran
ஆக 13, 2025 18:45

கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்ற பழமொழி ஒன்று இருக்கிறது. வின்சி அதற்கு பொருத்தமானவர்.


Karthik Madeshwaran
ஆக 13, 2025 18:36

Yes, yes, he’s such an honest person, you see. That’s exactly why the people voted him out and made him sit at home.


புதிய வீடியோ