உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி!

இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி!

புதுடில்லி: இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் பட்டியலில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.931 கோடி என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் பணக்கார முதல்வர் குறித்த பட்டியலை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிடும். அந்த வகையில், இந்தாண்டுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு நடந்த இடைத்தேர்தல்கள் உட்பட நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக முதல்வர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் 30 மாநில முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fxpzu8f2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் விபரம் பின்வருமாறு: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.981 கோடி சொத்து மதிப்புகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு காரணம் அவர் நடத்தி வரும் பால் உற்பத்தி நிறுவனம் தான். இந்த நிறுவனத்தை அவர் அரசியலுக்கு வருவதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டார். கடந்த 1992ம் ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனத்தின் பல கிளைகள் உருவாகி, அவரது சொத்து மதிப்பு உயர்வுக்கு வழி வகுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் சந்திரபாபு குடும்பத்தினர் வசம் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரிக்கு 24.37 சதவீத பங்குகள் உள்ளன. அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.332 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கிறார். மொத்தமாக பட்டியலில் இடம் பெற்றுள்ள 31 மாநில முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடியாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ரூ.55 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை கொண்டுள்ளார். கேரளாவை சேர்ந்த பினராயி விஜயன் ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் பட்டியில் கடைசியில் இருந்து 3ம் இடத்தில் உள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு 8 கோடியே 88 லட்சம் ரூபாய் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு கடன் எதுவும் இல்லை.

கடைசி இடத்தில் மம்தா

அதேநேரத்தில் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவர் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இவர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களை விடவும் ஏழ்மையானவராக இருக்கிறார். இவர் வசம் ரூ.15 லட்சத்திற்கு அதிக மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. 2016ம் ஆண்டு சட்டசபை தே ர்தலின் போது இவரது சொத்து மதிப்பு ரூ.30.4 லட்சமாக இருந்தது. இவரது சொத்து மதிப்புகள் காலப்போக்கில் குறைந்துவிட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டாப் 10 பட்டியல் இதோ!

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள பணக்கார முதல்வர்கள் பட்டியல் பின்வருமாறு: 1. ஆந்திரா முதல்வர், சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம் கட்சி)- ரூ.931 கோடி சொத்து, (ரூ.10 கோடி கடன்). 2. அருணாச்சல பிரதேச முதல்வர், பெமா காண்டு (பாஜ) - ரூ.332 கோடி சொத்து (ரூ.180 கோடி கடன்) 3.கர்நாடகா முதல்வர், சித்தராமையா (காங்கிரஸ்)- ரூ.51 கோடி சொத்து (ரூ.23 கோடி கடன்) 4. நாகலாந்து முதல்வர், நெய்பு ரியோ (என்.டி.பி.பி. கட்சி)- ரூ.46 கோடி சொத்து (கடன் ரூ.8 லட்சம்). 5. மத்திய பிரதேச முதல்வர், மோகன் யாதவ், (பாஜ)- ரூ.42 கோடி சொத்து (ரூ.8 கோடி கடன்) 6. புதுச்சேரி முதல்வர், ரங்கசாமி (என்.ஆர்.காங்., ) - ரூ.38 கோடி சொத்து, (கடன் ரூ.1 கோடி) 7. தெலுங்கானா முதல்வர், ரேவந்த் ரெட்டி (காங்கிரஸ்) - ரூ.30 கோடி சொத்து, (கடன் ரூ.1 கோடி) 8. ஜார்க்கண்ட் முதல்வர், ஹேமந்த் சோரன், (ஜார்க்கண்ட் முக்தி மோர்சா)- ரூ.25 கோடி (கடன் ரூ.3 கோடி) 9. அசாம் முதல்வர், ஹிமந்தா பிஸ்வா சர்மா (பாஜ)- ரூ.17 கோடி சொத்து (ரூ.3 கோடி கடன்) 10. மேகாலயா முதல்வர், கான்ராட் சங்மா ( என்பிபி கட்சி ) - ரூ.14 கோடி சொத்து, (கடன் ரூ.24 லட்சம்).11. திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, (பாஜ)- ரூ.13 கோடி சொத்து (கடன் ரூ.13 லட்சம்) 12. மஹாராஷ்டிரா முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் (பாஜ)- ரூ.13 கோடி சொத்து (ரூ.62 லட்சம் கடன்) 13. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் (பாஜ) - ரூ.9 கோடி சொத்து (ரூ.1 கோடி கடன்) 14. தமிழக முதல்வர், ஸ்டாலின் (திமுக)- ரூ.8 கோடி சொத்து, கடன் ஏதுமில்லை. 15. குஜராத் முதல்வர் புபேந்திர படேல் (பாஜ) - ரூ.8 கோடி சொத்து (ரூ.1 கோடி கடன்)16. ஹிமாச்சல பிரதேச முதல்வர், சுக்விந்தர் சிங் சுக்கு (காங்கிரஸ்) - ரூ.7 கோடி சொத்து (ரூ.22 லட்சம் கடன்) 17. சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் (சிக்கிம் கிராந்திகரி மோர்சா கட்சி) - ரூ.6 கோடி சொத்து (ரூ.15 லட்சம் கடன்) 18. ஹரியானா முதல்வர் நயாப் சிங் (பாஜ) - ரூ.5 கோடி சொத்து (ரூ.74 லட்சம் கடன்) 19. டில்லி முதல்வர், ரேகா குப்தா (பாஜ) - ரூ.5 கோடி சொத்து (ரூ.1 கோடி கடன்) 20. உத்தராகண்ட் முதல்வர், புஷ்கர் சிங் தாமி (பாஜ) - ரூ.4 கோடி சொத்து (ரூ.21 லட்சம் கடன்) 21. மிசோரம் முதல்வர் லால்துஹோமா (சோரம் மக்கள் இயக்கம்) - ரூ.4 கோடி சொத்து (ரூ.21 லட்சம் கடன்) 22. சத்தீஸ்கர் முதல்வர், விஷ்ணு தியோ சாய் (பாஜ) - ரூ.3 கோடி சொத்து (ரூ.65 லட்சம் கடன்) 23. ஒடிசா முதல்வர், மோகன் மஜி (பாஜ) - ரூ.1கோடி சொத்து (ரூ.95 லட்சம் கடன்) 24. பஞ்சாப் முதல்வர், பகவந்த் சிங் மான் (ஆம்ஆத்மி) - ரூ.1 கோடி சொத்து (ரூ.30 லட்சம் கடன்) 25. பீஹார் முதல்வர், நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) - ரூ.1 கோடி சொத்து, கடன் ஏதுமில்லை. 26. உத்தரபிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் (பாஜ) - ரூ.1கோடி சொத்து, கடன் ஏதுமில்லை. 27. ராஜஸ்தான் முதல்வர், பஜன் லால் சர்மா (பாஜ) - ரூ.1கோடி சொத்து (ரூ.46 லட்சம் கடன்) 28. கேரளா முதல்வர், பினராயி விஜயன் (மார்க்.கம்யூ., கட்சி) - ரூ.1கோடி சொத்து, கடன் ஏதுமில்லை. 29. ஜம்மு காஷ்மீர் முதல்வர், உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி) - ரூ.55 லட்சம் சொத்து, கடன் ஏதுமில்லை. 30. மேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி (திரிணமுல் காங்கிரஸ்) - ரூ.15 லட்சம் சொத்து, கடன் ஏதுமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Matt P
ஆக 26, 2025 11:03

மம்தா பானர்ஜி கையில கட்டியிருக்கும் ஆப்பிள் வாட்ச் கணக்கில் சேர்க்கப்படாதது மாதிரி தெரிகிறது.


theruvasagan
ஆக 24, 2025 22:11

8 கோடி சொத்துதானா. இங்க மூச்ச முட்ட முட்டு கொடுக்கறவனுக கூட இதை நம்பமாட்டாங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 24, 2025 19:43

எங்க கிம்ச்சை மன்னர் முதலிடத்தில் இல்லையா >>>> ஊ ஊ பீ யி ஸ் அதிர்ச்சி .... அது சரி .... முமைதா பேகம் சம்பாரிக்காத சொத்தா >>>>


Mecca Shivan
ஆக 24, 2025 19:33

இது பொய் என்று வருமானவரித்துறைக்கும் நிர்மலாவிற்கும் நன்றாக தெரியும் .. இருந்தாலும் தாங்களும் அப்படிதான் என்பதால் கண்டுகொள்ளமுடியாது .. கேவலம் ஒரு கவுன்சிலர் இன்று பல கோடிகள் சம்பாதிக்கிறான் .. அதுவும் வருஷத்திற்கு


என்றும் இந்தியன்
ஆக 24, 2025 19:10

சொத்து விவரம் அவர்கள் முழு குடும்ப சொத்து 1 சோனியா காந்தி - ரூ 91 லட்சம் கோடி 2 ஸ்டாலின் - ரூ 12 லட்சம் கோடி 3 மம்தா - ரூ 4 லட்சம் கோடி


M Ramachandran
ஆக 24, 2025 18:24

தவறாக கணித்து நம்ம ஸ்டாலினுக்கு கோபம் உண்டாக்காதீர்கள். அவர் கியாதியை குறைக்க முயல்கிறீர்கள். அவருக்கு முதல் இடம் தான் பிடிக்கும். அவர் அப்பா கோடியிட்டு காட்டிய வழியில் பாதம் வைத்து பார்த்து நடப்பவர். ஜிங்டி ஜிங்கிடி கூட்டணிக்கே வழி காட்டுபவர் அப்படி இருக்க அவரை மேல் இடத்தில் வைக்காமல் எங்கோ மூலையில் தள்ளினால் கோபம் வராதா?


M Ramachandran
ஆக 24, 2025 16:58

என்னைய்யா இவர்கள் நடை முறை தெரியாத முதலமைச்சர்கள். ஸ் டாலினிடம் கிளாஸ் யெடுக்க சொல்லி முறையாக பயிற்சிபெற்றிந்தால் எழையோ எழையான முதலவர்கள் பட்டம் பெற்றிப்பார்கள்.


vetrivel
ஆக 24, 2025 16:51

முற்றிலும் தவறான கணிப்பு. முதல் இடம் எங்கள் திராவிட மாடல் முதல்வருக்குத்தான். இதில் பெரும் தவறு உள்ளது. ஒருவேளை உலகத்திலேயே நம் முதல்வர் தான் முதலிட அரசியல்வாதி.ஹிஹிஹி


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2025 16:20

மாதம் 30000 கோடி பெறும் காபோதி உங்கள் லிஸ்டில் எந்த இடத்தில் இருக்கவேண்டும் ATR?


Gnana Subramani
ஆக 24, 2025 16:11

ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்த நடிகர் விஜய் தாத்தா இந்த சாதனையை முறியடிக்க வருகிறார்


சமீபத்திய செய்தி