உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணக்கார முதல்வர்கள் பட்டியல் முதலிடத்தில் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வருக்கு 14வது இடம்

பணக்கார முதல்வர்கள் பட்டியல் முதலிடத்தில் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வருக்கு 14வது இடம்

புதுடில்லி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள, நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 931 கோடி ரூபாயாகும். தமிழக முதல்வர் ஸ்டாலின், 8.8 கோடி ரூபாயுடன், பட்டியலில், 14வது இடத்தில் உள்ளார்.ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், நாட்டின் அனைத்து மாநில முதல்வர்களின் விபரங்களை ஆய்வு செய்து, புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சராசரி வருவாய்

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் தனிநபர் நிகர தேசிய வருவாய், 1.85 லட்சம் ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில், முதல்வர்களின் சராசரி வருவாய், 13.64 லட்சம் ரூபாயாக உள்ளது. அதாவது, தேசிய சராசரியைவிட, 7.3 மடங்கு அதிகம்.நாட்டின், 31 முதல்வர்களின் நிகர சொத்து மதிப்பு, 1,630 கோடி ரூபாய். இதில், 931 கோடி ரூபாயுடன், தெலுங்கு தேசத் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார். அருணாச்சல பிரதேசத்தின் பா.ஜ.,வைச் சேர்ந்த பெமா காண்டு, 332 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். காங்கிரசைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 51 கோடி ரூபாயுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.மிகவும் குறைவான சொத்து உள்ள முதல்வராக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு, 15 லட்சம் ரூபாய் மட்டுமே.அவருக்கு அடுத்ததாக, ஜம்மு - காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவருமான ஒமர் அப்துல்லாவுக்கு, 55 லட்சம் ரூபாயும், கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ., முதல்வர் பினராயி விஜயனுக்கு, 1.18 கோடி ரூபாய் மதிப்புக்கு மட்டுமே சொத்து உள்ளன.சொத்து பட்டியலில், 8.8 கோடி ரூபாயுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின், 14வது இடத்தில் உள்ளார்.முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு, 52.59 கோடி ரூபாய். அதிக கடன் உள்ளவர்களில், பெமா காண்டு, 180 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார். சித்தராமையாவுக்கு 23 கோடி ரூபாயும், சந்திரபாபு நாயுடுக்கு 10 கோடி ரூபாயும் கடன் உள்ளன. ஸ்டாலினுக்கு கடன் ஏதும் இல்லை.

கிரிமினல் வழக்குகள்

முதல்வர்களில், 13 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்.,கைச் சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 72 தீவிர வழக்குகள் உட்பட, 89 வழக்குகளுடன், முதலிடத்தில் உள்ளார். தீவிர வழக்குகள் 11 உட்பட 47 வழக்குகளுடன், இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஸ்டாலின் உள்ளார்.மொத்தமுள்ள 31 முதல்வர்களில், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, டில்லியில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஆதிஷி மட்டுமே பெண் முதல்வர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

B MAADHAVAN
ஜன 11, 2025 22:47

பொய் சொன்னாலும் பொருந்துவது போல், நம்பும்படி இருக்க வேண்டும்.


VSMani
டிச 31, 2024 13:38

சொத்து பட்டியலில், 8.8 கோடி ரூபாயுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின், 14வது இடத்தில் உள்ளார். இதல்லாம் நம்புறமாதிரியா இருக்கு?? ஒரு கவுன்சிலரே 5 வருட ஆட்சியில் மணல் கொள்ளை, சாலை கான்ட்ராக்ட் அது இது என்று கொள்ளை அடித்து 8.8 கோடி ரூபாய் சேர்த்துவிடுவார்.


Haja Kuthubdeen
டிச 31, 2024 08:34

இதல்லாம் நம்புறமாதிரியா இருக்கு?????


V வைகுண்டேஸ்வரன், chennai
டிச 31, 2024 07:59

இது திரித்து கூறப்படுகிறது...அதெப்படி? எல்லாவற்றிலும் தமிழகம் முதல் இடம்


Balasubramanian UnitedStates
டிச 31, 2024 03:32

எனக்கு சிரிக்கறதா இல்ல அழுகிரதா னு தெரியல அப்புறம் யோசிச்சு இப்போதைக்கு அழுதுறலாம். ஸ்டாலின் ஐயாவுக்கு இது பத்தி தெரிஞ்சால் அவரு என்ன ரியாக்ட் பண்ணுவார்னுனு எல்லாருக்கும் தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை