4 இடங்களில் சோதனை சாவடி திறப்பு
புதுடில்லி: டில்லி மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வரவும், வாகன ஓட்டிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும், வடக்கு மண்டலத்தில் நான்கு சோதனை சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. ஷாபாத் தவுலத்பூரில், டில்லி தொழில்நுட்ப பல்கலை, பல்லா ரெட் லைட், ஜிந்த்பூர் மற்றும் முகர்ஜி சவுக் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சோதனைச் சாவடிகள் நேற்று முன் தினம் திறக்கப்பட்டன. இந்த சோதனை சாவடிகள், போக்குவரத்து போலீசாருக்கு சிறந்த பணிச் சூழலை வழங்குவதுடன், வாகன ஓட்டிகளுக்கு ஒருங்கிணைப்பு மையங்களாகவும் செயல்படும் என, போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரி கூறினார்.