சென்னை - மைசூரு ரயில் எண்கள் மாற்றம்
பெங்களூரு: 'மார்ச் 1ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் - மைசூரு ரயில் எண்ணும்; மார்ச் 7ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் - ஹூப்பள்ளி ரயில் எண்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:மார்ச் 1ம் தேதி முதல், சென்னை சென்ட்ரல் - மைசூரு தினசரி விரைவு ரயில் எண் 16551 என்ற எண்ணில் இயங்கும். அதுபோன்று மார்ச் 2ம் தேதி முதல், மைசூரு - சென்னை சென்ட்ரல் தினசரி விரைவு ரயில் 16552 என்ற எண்ணில் இயங்கும்.மார்ச் 6ம் தேதி முதல், யஷ்வந்த்பூர் - திருவனந்தபுரம் வாராந்திர விரைவு ரயில் 16561 என்ற எண்ணிலும்; மார்ச் 7ம் தேதி முதல் திருவனந்தபுரம் - யஷ்வந்த்பூர் வாராந்திர ரயில் 16562 என்ற எண்ணிலும் இயங்கும்.மார்ச் 6ம் தேதி முதல் ஹூப்பள்ளி - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில் 20680 என்ற எண்ணிலும்; மார்ச் 7ம் தேதி சென்னை சென்ட்ரல் - ஹூப்பள்ளி வாராந்திர ரயில் 20679 என்ற எண்ணிலும் இயங்கும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.