சென்னை விமானங்கள் ரத்து
ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, லண்டன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதும், அவ்விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனால் பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று மதியம் 1:30, மாலை 3;15, மாலை 5:45 ,இரவு 8:05 மணிக்கு சென்னையில் இருந்து ஆமதாபாத செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதே போல் ஆமதாபாதில் இருந்து சென்னை வர வேண்டிய, நான்கு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.