உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு சிக்கன் பஜ்ஜி!

மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு சிக்கன் பஜ்ஜி!

பொதுவாக மாலை நேரத்தில் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். பஜ்ஜி, போண்டா ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்தது.அதுவும் மழைக்காலம் வந்தால் போதும். சூடான மொறு மொறு பஜ்ஜி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றும். இவ்வாறு தோன்றிய உடன் நாம் அனைவரும் வெங்காய பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி போன்று ஏதாவது ஒன்று தயார் செய்து சாப்பிடுவோம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான பஜ்ஜி வகை ஒன்றை பார்க்க போகிறோம்.அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் குழம்பு என பலவகை ரெசிபியை பார்த்து உள்ளோம். ஆனால் சிக்கனில் பஜ்ஜியும் செய்யலாம்.தேவைப்படும் பொருட்கள்:அரை கிலோ எலும்பு இல்லாத சிக்கன்ஒரு கப் கடலை மாவுஒரு கப் அரிசி மாவுஒரு டீஸ்பூன் உப்புஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுஒரு டீஸ்பூன் மஞ்சள் துாள்இரண்டு டீஸ்பூன் மிளகாய் துாள்அரை டீஸ்பூன் மிளகுத்துாள்ஒரு டீஸ்பூன் சோயா சாஸ்2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுதேவையான அளவு எண்ணெய்செய்முறை:முதலில் சிக்கனை நன்கு கழுவி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், மிளகுத்துாள், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ் என அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.பின், மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கரைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதை நன்கு காய விடவும். கரைத்து வைத்திருந்த மாவில் சிக்கனை புரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும். சூடான, சுவையான சிக்கன் பஜ்ஜி தயார். -- நமது நிருபர் ----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி