உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதிகள் குறித்து அவதூறு: தலைமை நீதிபதி கவலை

நீதிபதிகள் குறித்து அவதூறு: தலைமை நீதிபதி கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வராத போது, நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார்.தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதி மவுஷூமி பட்டாச்சார்யா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பெடி ராஜூ என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கவாய் முன்பு விசாரணைக்கு வந்த போது, மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, ' ராஜூ மன்னிப்பு கேட்டதாகவும், இதனை தெலுங்கானா நீதிபதி ஏற்றுக் கொண்டார்', எனவும் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4f9k9lpm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது தலைமை நீதிபதி கவாய் கூறியதாவது: சமீப நாட்களாக ஒரு நீதிபதி சாதகமான உத்தரவுகளை பிறப்பிக்காத போது, அவருக்கு எதிரான அவதூறான குற்றச்சாட்டுகளை கூறும் போக்கு அதிகரித்துள்ளதை நாங்கள் கவனித்து வருகிறோம். இது போன்ற நடைமுறைகள் கடுமையான கண்டனத்துக்கு உரியவை. இந்த நடைமுறைகள் நிறுத்தப்பட வேண்டும்.வழக்கறிஞர்கள், நீதிமன்ற அதிகாரிகளாக நீதிமன்றத்திற்கு கடமைப்பட்டுள்ளனர். சட்டத்தின் மகத்துவம் தண்டனையில் இல்லை. மன்னிப்பு கேட்கும் போது மன்னிப்பதில் உள்ளது. மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஐகோர்ட் நீதிபதி மன்னிப்பை ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவது இல்லை.இருப்பினும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு முன்னர் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மார்பிங் வீடியோ

இந்திய நீதித்துறையில் ஏஐ பயன்படுத்துவதற்கு விதிமுறைகள் அல்லது கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை தலைமை நீதிபதி கவாய் மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.வழக்கறிஞர் கூறுகையில், நீதிமன்றத்திலும் ஏஐ பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதில் உள்ள தீமைகள் குறித்து விளக்கிய போது கவாய் கூறுகையில், 'அது குறித்து நாங்கள் அறிவோம். எங்கள் குறித்த மார்பிங் வீடியோ ஆன்லைனில் வந்ததை நாங்களும் பார்த்தோம் ' எனத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Gajageswari
நவ 13, 2025 06:10

தீர்ப்புகள் விரைவாக கிடைத்தால் இவ்வாறு அவப்பெயர் வராது


suresh Sridharan
நவ 11, 2025 07:36

திருட்டில் இருந்தும் கொலையிலிருந்து தப்பிக்க வைக்கும் ஒருவர் தான் வக்கீல் பத்தாண்டுகள் கழித்த பின் அதே திருடர்களை காக்கும் கடவுளும் ஜட்ஜ் இரண்டும் ஒன்றுதான்


jss
நவ 11, 2025 07:34

கபில் சிபல், அபிஷக் மனு சிங்வி போன்றவர்கள் dejure நீதிபதிகளாக பணியாற்றுவதை அனுமதிக்கும் நீதிபதிகள் மீது விமர்சனம் வரத்தான் செய்யும். காசு க்கு நீதி எழுதினால் விமரசனம் வரத்தான் செய்யும் . நீதிபதிகளே நீதிபதியை தேரந்தெடுக்கும் முறையால் விமரசனம் வரத்தான் செய்யும். அளவுக்கு மீறி வாய்தா கொடுக்கும் முறையால் விமர்சனம் வரத்தான் செய்யும். ஊழல்வாதிகளை தப்புவிக்க சட்டத்தை வளைக்கும் முறையை தடுக்காத நீதியரசர்களால் விமர்சனம் வரத்தான் செய்யும். இவ்வளவுதான் யோசிக்க முடிந்தது . இதைத்தவிர இன்னும் எவ்வளவோ உள்ளது. தவறை வைத்துக்கொண்டு மற்றவரை குற்றம் சொல்வதற்க்குப் பெயர் autocracy என்று எடுத்துக் கொள்ளலாமா?


திகழ் ஓவியன் AJAX ONTARIO
நவ 11, 2025 06:51

இதை பேசாமல் அந்த கடவுளிடம் போய் சொல்லலாமே...அந்த ஜனாதிபதியின் கேள்விகளுக்கு எப்போ பதில் தருவீர்கள்...? அடுத்த koligium பரிந்துரை செய்ய வேண்டுமா?


தாமரை மலர்கிறது
நவ 11, 2025 00:25

இதற்காகத்தான் சமூகவலைத்தளங்கள் அரசிடம் அனுமதி பெற்றபிறகே கருத்து தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரவேண்டும். ஆளாளுக்கு இஷ்டத்திற்கு வதந்தி பரப்பி மக்களை முட்டாளாக்கி வருகிறார்கள்.


Techzone Coimbatore
நவ 10, 2025 23:23

நாட்டில் எவ்வளவோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும் போது ஐந்தறிவு தெரு நாய்கள் மீது வன்மம் கக்கும் ஒரு பிரச்சனையை என்று எடுத்து தீர்ப்பு கொடுக்கும் நீதிபதிகள். டெல்லி காற்று மாசுபாடு, பெண்கள் எதிரான பாலியல் பாதிப்புகள், ஊழல்கள் பற்றி கவலை இல்லை. பொது மக்களும் அதை பற்றி கவலை படுவதில்லை.


c.mohanraj raj
நவ 10, 2025 22:20

இவர்கள் மட்டும் எல்லாத் துறையைப் பற்றியும் கேள்வி கேட்பார்களாம் அவர்கள் அடங்கி பதில் சொல்ல வேண்டுமாம் ஆனால் இவர்கள் துறையில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது அது இவர்களுக்கும் தெரியும் ஆனால் மக்கள் கருத்து சொல்லக்கூடாது மக்கள் என்ன மடையர்களா அல்லது நீங்கள் என்ன வெள்ளைக்காரர்களா அடிமைப்படுத்த ஆண்டு கொண்டிருக்கின்றீர்களா


Anantharaman Srinivasan
நவ 10, 2025 22:00

அரசியல்வாதிகள் மந்திரிகள் ஊழல் வழக்கில் கீழ் கோர்ட் டில் விடுதலை. அதே வழக்கை உயர்நீதிமன்றம் தாமே முன்வந்து மீண்டும் எடுத்து நடத்துவது ஏன்? அப்படிப்பட்ட நிலையில் கீழ் கோர்ட் நீதிபதிகளை ஏன் விமர்சனம் செய்யக்கூடாது..?


tamilvanan
நவ 10, 2025 21:50

பொதுமக்களை பற்றி கவலைப்படாமல் தெருநாய்களை காக்க உத்தரவுகள் பிறப்பிக்கும் நீதிபதிகளை அவதூறு சொல்லாமல் பாராட்டவா முடியும்,


Techzone Coimbatore
நவ 10, 2025 23:38

இந்த உலகின் மிக மோசமான இனம் ஒன்று இருந்தால் மனித இனம் மட்டுமே இன்று உலகம் நாசமாய் போவதே மனிதனால் மட்டுமா, ஒழுக்கம் கிடையாது, நேர்மை கிடையாது, பொறுப்பற்ற வாகன விபத்துகள், பெண்கள் எதிரான பாலியல் குற்றங்கள், பிற உயிரினங்கள் மீதான கருணை அக்கறை கிடையாது, இயற்கை சீரழிவு பற்றி கவலை கிடையாது, காற்று மாசுபாடு, மது போதை பின்னால் அலைவது, அரசியல்வாதிகள் ஊழல்கள் பற்றி கவலை கிடையாது, சாதி, மதம், மொழி என்று அடித்து கொள்வது, முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்றவை அக்கறையற்ற மனிதர்களால் தான். ஐந்துஅறிவு நாய்கள் இது போன்ற கேவலமான செயல்கள் செய்வதில்லை. ஆதலால் தான் உங்களை போன்ற மனிதர்கள் நன்றி உள்ள நாய்கள் மட்டுமல்ல எல்லா உயிரணங்களும் பாதிப்பு அடைகின்றன குறிப்பாக சிட்டு குருவி, காட்டு விலங்குகள் அழிந்து வருகின்றன. மனிதன் மட்டும் வாய் இச்சைக்கு தினம் லச்சங்கணக்கான கோழி, ஆடு, மாடு கொண்டு சாப்பிடலாம். அப்படிதானே மனிதன் என்ன ஆட்டம் போடலாம்


Rajasekar Jayaraman
நவ 10, 2025 20:48

காங் கிராஸ் போட்ட பிச்சையோ என்று சந்தேகமாக இருக்கிறது.


முக்கிய வீடியோ