உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் -கவர்னர் மோதல் விரும்பதகாதது : கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை

முதல்வர் -கவர்னர் மோதல் விரும்பதகாதது : கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை

கோல்கட்டா: முதல்வரும் - கவர்னரும் நீதிமன்றத்தில் சண்டையிட்டு கொள்வது விரும்பதகாதது என மேற்குவங்க முதல்வர் மீது கவர்னர் ஆனந்த போஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.கடந்தாண்டு ஜூலையில் இரு திரிணாமுல் காங்., எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் விவகாரம், கவர்னர் மாளிகை பெண் பணியாளர் கவர்னர் மீது பாலியல் புகார் கூறிய விவகாரம் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் - கவர்னர் ஆனந்த போஸ் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி வந்ததது.இது குறித்து மேற்குவங்க தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் முதல்வர் மம்தா பேசும் போது, ‛‛சமீபத்திய நிகழ்வுகளால், கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர் '' எனக் கூறியிருந்தார். இந்த கருத்தின் மீது ஆத்திரமடைந்த கவர்னர் ஆனந்த போஸ், மம்தா பானர்ஜி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் மீது கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணாராவ் முன் விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வழக்கறிஞரும் காரசாரமாக வாதிட்டனர்.நீதிபதி கிருஷ்ணாராவ் கூறியது, மாநில முதல்வரும், கவர்னரும் இப்படி நீதிமன்றத்தில் சண்டையிட்டு கொள்வது விரும்பதகாதது, இரு தரப்புக்கும் நல்லதல்ல. இருவரும் பரஸ்பரம் ‛தேனீர் அருந்தி ' சமரசம் செய்து கொண்டு பிரச்னையை தீர்த்து கொள்ளவதே சரியானது. இது வாய்மொழியான அறிவுரை அல்ல . இருதரப்பும் ஒத்துக்கொண்டால் எழுத்துபூர்வ உத்தரவு பிறப்பிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

முருகன்
மார் 07, 2025 09:59

இனியாவது கவர்னர்களுக்கு கடிவாளம் போட வேண்டும் மக்கள் பிரச்சினைகள் பேச மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் போது


Louis Mohan
மார் 07, 2025 09:14

நம்ம ஆள இப்படி மாட்டி விட முடியாதா ?


GMM
மார் 07, 2025 08:06

கவர்னர் வழக்கு தொடர்வது சரியல்ல. மாநில தேர்தல் ஆணையம் மூலம் மம்தா மீது நடவடிக்கை மற்றும் மம்தா நிர்வாகிகள் தலைமை செயலர் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய கேட்க வேண்டும். அறிக்கையில் ஒழுங்கீனம் இருந்தால், மம்தாவை டிஸ்மிஸ் செய்து புதிய முதல்வர் தேர்வுக்கு சபாநாயகர் மூலம் உத்தரவிட வேண்டும். நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் போலீஸ் கைது செய்ய உத்தரவிட வேண்டும். வழி தெரியாமல் எதற்கு எடுத்தாலும் நீதிமன்றம் சென்றால் தீர்வு கிடைக்காது. 5 ஆண்டுகள் தற்காலிக மக்கள் பிரதிநிதி மம்தா தான் நீதிமன்றம் செல்ல வேண்டும். கவர்னர் பதவி நிரந்தரம்.


saravan
மார் 07, 2025 07:35

நம் நாட்டில் பெண் முதல்வர்கள் யாரும் நல்லாட்சியை கொடுத்ததில்லை...ஆணவமும், அடக்குமுறையும் மட்டுமே ஓங்கியிருக்கும்...


சுராகோ
மார் 07, 2025 07:11

எப்படிப்பட்ட கேவலமான அரசியல் செய்கிறார் மமதா அவர்கள். கருத்தோடு அரசியல் செய்யலாம் ஆனால் இவர் செய்வது எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. இங்குள்ள திராவிட மாடல் அரசு கற்றுக்கொடுத்தது


sampath, k
மார் 07, 2025 06:54

Governors to be changed once in three years. Superim Court should take action against Governors who are not cooperating with the elected governments considering the interest of the peoples of particular state. Why these problems are not in BJP ruling states. It is absolutely vengeance activities against opposite ruling governments


Kasimani Baskaran
மார் 07, 2025 06:38

அரசியல் சாசனத்தின் காவலன் ஜனாதிபதி. அவரது பிரதிநிதி கவர்னர். ஆகவே அவரை விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு என்று இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை. முடிந்த அளவுக்கு உருட்டலாம்.


கபிலன்
மார் 07, 2025 02:50

தவறு செய்பவர்களை சுட்டி காட்ட கூட முடியாத நீதிமன்றத்தின் கருத்தும் விரும்பத்தகாதது தான். நீதிமன்றத்தின் துணிவு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே மட்டும் தான் செல்லுபடி ஆகிறது. அடக்குமுறை செய்பவர்கள், ஆதிக்க சக்திகள் மற்றும் பணக்காரர்களுக்கு எப்போதும் சாதகமாக உள்ளது. கபில்சிபல், வில்சன் பிரசாந்த் பூஷண், அபிஷேக் சிங்வி போன்றவர்கள் நீதிமன்றத்தினை ஆட்டி படைப்பதை பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது.


Mani
மார் 07, 2025 07:30

Yes


Easwar Kamal
மார் 07, 2025 00:54

என்ன இப்படி பொசுக்குன்னு நீதிபதி சொல்லிட்டாரு. கவர்னர் எவ்வளவு தூரம் முரண் படுகிறாரோ அவ்வளவு நாள் கவர்னர் பொறுப்பில் இருப்பார். முதல்வரோடு இணக்கமாகி போனால் அடுத்த நாள் காணாமல் போய் விடுவார் நம்ம தமிழிசை அக்கா மாதிரி. இதுதான் ரெட்டை குழல் துப்பாக்கி கவர்னர்களுக்கு வைத்து இருக்கிற டெஸ்ட்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை