உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1,000 அரசு கட்டடங்களில் சூரிய ஒளி மின்சார ஆலை முதல்வர் ரேகா குப்தா தகவல்

1,000 அரசு கட்டடங்களில் சூரிய ஒளி மின்சார ஆலை முதல்வர் ரேகா குப்தா தகவல்

புதுடில்லி:“தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் ஒவ்வொரு இந்தியரின் பங்கும் இருக்க வேண்டும்,” என, முதல்வர் ரேகா குப்தா பேசினார். புதுடில்லி துவாரகா யஷோபூமியில் நேற்று நடந்த 'இந்திய பயோ எனர்ஜி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி'யில் முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள தற்சார்பு கொள்கையை மக்கள் பின்பற்ற வேண்டும். நம் நாட்டுப் பொருட்களை பயன்படுத்தி, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஒவ்வொரு இந்தியரும் பங்களிக்க வேண்டும். பிரதமர் மோடி கூறியது போல நாம் சுயசார்பு அடைய வேண்டும். நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றி 'விஸ்வ-குரு'வாக மாற ஒரே வழி அதுதான். இவ்வாறு அவர் பேசினார். 55 மெகாவாட் வடமேற்கு டில்லி ரித்தாலா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள, 25 கிலோவாட் சூரியஒளி மின் நிலையத்தை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்துப் பேசியதாவது: டில்லி மாநகர் முழுதும் 1,000 அரசு கட்டிடங்களில் சூரியஒளி மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால், 55 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிறைவடையும். கழிவுகளிலிருந்து மின்சாரம், உரம் மற்றும் இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலைகள் அமைத்து பசுமையான டில்லியை பா.ஜ., அரசு உருவாக்கி வருகிறது. தெஹ்கண்ட்டில் மின்னணு கழிவுகளை பதப்படுத்தும் ஆலைக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்கள், சார்ஜர்கள், பேட்டரிகள் போன்ற நிராகரிக்கப்பட்ட மின்னணு கழிவுப் பொருட்கள் தினமும் -12,000 மெட்ரிக் டன் வரை டில்லியில் சேகரிக்கப்படுகிறது.இதில், 7,000 மெட்ரிக் டன் மட்டுமே அப்புறப்படுத்தப்படுகிறது. கழிவுகள் தொடர்ந்து குவிந்து கொண்டே இருந்தால் நகரத்தில் உள்ள குப்பை மலைகளை எப்படி அகற்றுவது? எனவே, கழிவுகளிலிருந்து எரிசக்தி உருவாக்கும் ஆலைகளை அமைக்கும் பணி துவக்கப்படுகிறது. 1 லட்சம் கிலோ குப்பை சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகுதான், நாட்டின் தலைநகரான டில்லியில் மாட்டுச் சாணத்தை பதப்படுத்தி இயற்கை எரிவாயு ஆலை அமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான கால்நடைகளின் சாணம் யமுனை நதி நீரில் கலந்து வந்தது. தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. தினமும் 200 டன் பதப்படுத்தும் திறன் கொண்ட நகரத்தின் முதல் பயோ காஸ் ஆலை நங்லியில் துவக்கப்பட்டுள்ளது. கோகோ டெய்ரியில் மூன்று ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள தினமும் ஒரு லட்சம் கிலோ குப்பைகளை பதப்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலை இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் தினமும் நான்கு டன் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படும். தலைநகர் டில்லியை மாசு இல்லாத தூய்மையான, பசுமையான மாநகரமாக மாற்ற திட்டமிட்டு பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. டில்லியில் தற்போது, 3000 மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரைவில் அனைத்து பஸ்களும் மின்மயம் ஆக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ரித்தாலா தீயணைப்பு நிலையத்தை, முதல்வர் ரேகா குப்தா திறந்து வைத்தார். தீன் தயாள் உபாத்யாயா கல்லுாரியில் நேற்று நடந்த ஆண்டு விழாவில் முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது: இந்தக் கல்லூரி கடந்த காலங்களில் நிதிப்பற்றாகுறையால் தத்தளித்தது. முந்தைய ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில், பேராசிரியர்கள் பல மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். எதிர்காலம் ஆனால், பா.ஜ., அரசு கல்வி நிறுவனங்களின் நிதி நிலையை சீரமைத்துள்ளது. அரசுப் பள்ளியில் படித்தேன் என்று சொல்வதை மக்கள் பாக்கியமாக உணருகின்றனர். நிகழ்காலத்தை பெருமையுடன் ஏற்றுக் கொண்டால்தான் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டை வழிநடத்துவது எளிதானது அல்ல. ஆனால், அந்த்யோதயா என்ற கருத்தை வழங்கிய தீன் தயாள் பண்டிட் போன்ற ஆளுமைகளால் மட்டுமே அது சாத்தியமானது.- நம் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கருத்தைப் பின்பற்றுகிறார். கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, மாணவர்களிடம் தேசபக்தி உணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். இளைஞர் சக்திதான் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும். எம்.எல்.ஏ., சந்தீப் சஹ்ராவத் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியகள் பங்கேற்றனர். முன்னதாக, கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ரேகா குப்தா மரியாதை செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !