மேலும் செய்திகள்
இந்திய ராணுவத்திற்கு தமிழக தலைவர்கள் பாராட்டு
08-May-2025
புதுடில்லி:“நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசையோ, ராணுவத்தையோ கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை,” என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:நாட்டில் அவசரகால சூழ்நிலை ஏற்படும் போது, நாட்டின் நலன் கருதியே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அப்போது, மொத்த நாடும் ராணுவத்துக்கு ஆதரவாக இருக்கிறது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின், மத்திய அரசு 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது. அதன்பின், சில சூழ்நிலைக்காக ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டு, பாகிஸ்தானுடன் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், போர் நிறுத்தம் ஏன்? என மத்திய அரசிடம் ஆம் ஆத்மி கட்சி கேள்வி கேட்கிறது.ஏ.சி., அறையில் உட்கார்ந்து கொண்டு, 'டிவி' பார்த்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தையும் சொல்லலாம். இதுபோன்ற அவசரகால சூழ்நிலையில், ஒரு தந்தையைப் போல நம் நாட்டைப் பற்றியும், 140 கோடி மக்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். வெறும் அறிக்கைகளை வெளியிடுவது உதவாது. மத்திய அரசையோ, ராணுவத்தையோ கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஆதிஷி சிங், சமூக வலைதளத்தில் நேற்று முன் தினம் பதிவிட்ட வீடியோவில், “ஆப்பரேஷன் சிந்தூர் நம் ராணுவத்தின் துணிச்சலைக் காட்டியது. ஆனால், கடந்த 10ம் தேதி அமெரிக்க டிரம்பின் அறிவிப்புக்குப் பின், மத்திய அரசு போர் நிறுத்தத்தை உறுதி செய்தது. பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பிடிபட்டார்களா என்பதை அறிய நாட்டு மக்கள் விரும்புகின்றனர்,” என, கேள்வி எழுப்பியிருந்தார்.டில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “போர் நிறுத்த என்ற முடிவை திடீரென அறித்ததற்கு என்ன காரணம்? இந்த முடிவு எடுப்பதற்கு பின்னால் என்ன நடந்தது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்,”என, கோரியிருந்தார்.
08-May-2025