உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலையில் திரிந்த பசுக்களால் காரை நிறுத்திய முதல்வர்

சாலையில் திரிந்த பசுக்களால் காரை நிறுத்திய முதல்வர்

புதுடில்லி:சாலையில் கூட்டமாக பசு மாடுகள் சென்றதையடுத்து, சட்டசபை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த டில்லி முதல்வர் ரேகா குப்தா, காரை நிறுத்தி, அவற்றை பாதுகாப்பாக அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான நேற்று, சட்டபை முடிந்து பிற்பகலில் முதல்வர் ரேகா குப்தா தன் இல்லத்துக்குச் சென்று கொண்டிருந்தார். ஹைதர்பூர் மேம்பாலத்தில், பசு மாடுகள் கூட்டமாக நடுரோட்டில் சென்றன.தன் காரை ஓரமாக நிறுத்தி இறங்கிய முதல்வர் ரேகா, அவற்றைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க தன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்தப் பகுதியில் திரியும் கால்நடைகளுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யவும், அங்கிருந்தபடியே அதிகாரிகளுக்கு போனில் உத்தரவிட்டார். இதனால், 15 நிமிடங்களுக்குப் பின், காரில் ஏறி இல்லத்துக்குச் சென்றார்.டில்லி சட்டசபையில் நேற்று முன் தினம், முதல்வர் ரேகா தாக்கல் செய்த பட்ஜெட்டில், நவீன பசுக் காப்பகம் அமைக்க 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை