முதல்வர் வேட்பாளர் நிதிஷ்!
பீஹார் சட்டசபை தேர்தலில், ஆளும் தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமா க நடந்து வருகிறது. விரைவில் தொகுதிகள் இறுதி செய்யப்படும். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கிரிராஜ் சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,செயல் பிரதமர்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படியே, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், தில்லுமுல்லு வேலைகளை தேர்தல் கமிஷன் செய்கிறது. சொல்லப் போனால், செயல் பிரதமராக அமித் ஷா செயல்படுகிறார். இது பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்கு தெரியும். மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,அமைதி காப்பது ஏன்?
சபரிமலை அய்யப்பன் கோவிலில், துவார பாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசத்தின் எடை குறைந்துள்ள விவகாரம் மிகவும் தீவிரமானது. சட்டசபையில் இது குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளித்தும், முதல்வர் பினராயி விஜயன் அமைதி காப்பது ஏன்? இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். வி.டி.சதீஷன் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், காங்.,