உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எலி கடித்து குழந்தை பலி; ம.பி., மருத்துவமனை அவலம்

எலி கடித்து குழந்தை பலி; ம.பி., மருத்துவமனை அவலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்துார்: மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தை, எலி கடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள அரசு மருத்துவமனையின் என்.ஐ.சி.யூ., எனப்படும், பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், என்.ஐ.சி.யூ., பகுதியில் சிகிச்சையில் இருந்த இரு பச்சிளங் குழந்தைகளின் கை, கால், கழுத்து, விரல் உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. குழந்தைகள் அழுதபடி இருந்ததை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், குழந்தைகளை எலி கடித்தது தெரியவந்தது. இதையடுத்து, இரு குழந்தைகளுக்கும் அடுத்த கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை நேற்று உயிரிழந்தது. இது தொடர்பாக, விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், சம்பவம் நடந்த போது, தீவிர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த இரு செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மருத்துவ கண்காணிப்பாளர் உள்ளிட்ட நான்கு பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பூச்சிக்கொல்லி மருந்து அளிக்கும் தனியார் நிறுவனத்துக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவமனை டீன் அரவிந்த கங்கோரியா கூறியதாவது:

மருத்துவமனையில் எலி தொல்லை இருப்பது குறித்து இரு நாட்களுக்கு முன்னரே ஊழியர்கள் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்கும் சமயத்தில் இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது. எலி கடித்த ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எலி கடித்து இறந்த குழந்தை, சுவாசக் கோளாறு உட்பட பல்வேறு பிரச்னைகளில் அவதிப்பட்டு வந்தது. எலி கடித்ததால் மட்டும் குழந்தை உயிரிழக்கவில்லை. சம்பவம் குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
செப் 04, 2025 09:48

நாடு வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போடுகிறது. ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சவுகான் தகவல்.


Kasimani Baskaran
செப் 04, 2025 03:42

அதெ சமயம் தமிழகத்தில் இரண்டு கால் எலிகள் உடல் உறுப்புகளை மோசடி செய்யும். ஆனால் உடல் உறுப்பு மோசடிக்கு உள்ளான ஆள் பிழைத்துக்கொள்வார்... திராவிட மாடலின் சாதனை பாரீர்.. பெரியார் மட்டும் இல்லை என்றால்...


ஜெய்ஹிந்த்புரம்
செப் 04, 2025 01:16

எலி கடித்ததால் மட்டும் குழந்தை உயிரிழக்கவில்லை - ஊழலும் தான் காரணம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 04, 2025 01:15

டபுள் எஞ்சின் சாதனை தான்


Ramesh Sargam
செப் 04, 2025 01:02

மிகவும் மோசமான நிலையில் அரசு மருத்துவமனைகள். விண்வெளிக்கு ராக்கெட் விட்டால் மட்டும் போதாது. இதுபோன்ற சிறு சிறு அவலங்களையும் சரிப்படுத்தவேண்டும். ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் எலி புகும் அளவுக்கு அலட்சியமா...?


Moorthy
செப் 04, 2025 00:58

நமது நாட்டின் மிக சுத்தமான நகரமாம் இந்தூர் கடந்த 5 வருடங்கள் தொடர்ச்சியாக முதலிடமாம் ஆனால் இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எலி கடித்து குழந்தைகள் பாதிப்பாம் குப்பைகள்,,உணவு எச்சங்களை தேடித்தான் எலிகள் வரும் நல்ல சர்வே , நல்ல முதலிடம்


Moorthy
செப் 04, 2025 00:52

சப்ப கட்டை பாருங்கள் தவறை ஏற்று கொள்ள பயந்து பொறுப்பை துறக்கும் அரசு இயந்திரம் நம் நாடு சீக்கிரம் வல்லரசாகி விடும்


SANKAR
செப் 04, 2025 17:10

Sorry Nehru and not current government responsible for this.


புதிய வீடியோ