உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7 வயது சிறுமியை கடித்துக் குதறிய தெருநாய்கள்; தெலங்கானாவில் அதிர்ச்சி

7 வயது சிறுமியை கடித்துக் குதறிய தெருநாய்கள்; தெலங்கானாவில் அதிர்ச்சி

வாரங்கல்: தெலங்கானாவில் 7 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாளுக்கு நாள் தெருநாய்கள் தொந்தரவு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தெருநாய்கள் தாக்குதல் சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன. இந்த நிலையில், தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை என்ற பகுதியில் சாலையில் நடந்து சென்ற 7 வயது சிறுமியை தெருநாய்கள் கொடூரமாக கடித்துக் குதறிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையில் நடந்து சென்ற அந்த சிறுமி, தெருநாய் கடிக்க வருவதைக் கண்டு கீழே விழுகிறார். அதன்பிறகு, தெருநாய்கள் ஒன்று சேர்ந்து சிறுமியை கொடூரமாக கடித்துக் குதறின. இதனைக் கண்ட நபர் ஒருவர் நாய்களை விரட்டி விட்டு, சிறுமியை மீட்டு செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றமே தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !